(662)

(662)

பொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன்

செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம்

மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்

மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே


பதவுரை

பொய்

க்ருத்ரிமமாய்
சிலைகுரல்

கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான
ஏறு

(ஏழு) ரிஷபங்களின்
எருத்தம் இறுத்து

முசுப்புகளை முறித்தவனாய்
போர் அரவு ஈர்த்த கோன்

போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்தஸ்வாமியாய்,
சிலை செய்

கல்லினால் செய்யப்பட்டு
சுடர்ஒளி

மிக்க தேஜஸ்ஸையுடைத்தாய்
திண்ணம்

த்ருடமாயிருக்குந்தன்மையையும் உடைத்தாய்
மா

பெரிதான
மதிள் சூழ்

மதிகளாலே சூழப்பட்ட
தென் அரங்கன் ஆம்

தென்னரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான ரங்கநாதனாகிய
மெய் சிலை கரு மேகம் ஒன்று

சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காளமேகமானது
தன் நெஞ்சுள் நின்று திகழப்போய்

தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற
மெய் சிலிர்ப்பவர் தம்மையே

மயிர்க்கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே
என் மனம் நினைந்து

என் நெஞ்சானது அநுஸந்தித்து
மெய் சிலிர்க்கும்

மயிர்க்கூச்செறியப் பெற்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியார்களை ஆட்கொள்வதற்காக அருமையான செயல்களைச் செய்தருளின எம் பெருமானாகிற காளமேகத்தை ஹ்ருதயத்திலே வஹிக்கப்பெற்று எப்போதும் மயிர்க்கூச்செறியும் திருமேனியையுடயரா யிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அநுஸந்தித்து, அவர்கள் பாடும் பாட்டை என்னெஞ்சு படாநின்ற தென்கிறார்.

“திகழப்போய்” என்ற விடத்து, போய்-வார்த்தைப்பாடு.

“மனம் மெய்சிலிர்க்கும்” என்றது-மனம் விகாரப்படாநின்ற தென்றபடி.

English Translation

The Lord of Arangam is surrounded by high masonry walls that radiate his aura. He killed seven charging bulls and battled with a terrible serpent. He is like a rainbow – adorned dark cloud. Those who contemplate him in their hearts, experience horripilation. When my heart goes out to these devotees, I too experience horripilation.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top