(636)
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே
பதவுரை
| வில்லைதுலைத்த |
– |
வில்லைத் தோற்கடித்த |
| புருவத்தாள் |
– |
புருவங்களையுடையளாய் |
| வில்லி புதுவை நக் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை |
– |
ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான் பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள், |
| அல்லல் விளைத்து பெருமானை |
– |
(திருவாய்ப் பாடி முழுதும்) தீங்குவிளைத்து அதனால் பெருமைபெற்றவனும் |
| ஆயர்பாடிக்கு அணி விளக்கை |
– |
திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம்போன்றுப்ரகாசகனுமான கண்ணபிரானை |
| வேட்டை உற்று |
– |
ஆசைப்பட்டு |
| மிக விரும்பும் சொல்லை |
– |
மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச்செய்த இப்பாசுரங்களை |
| துதிக்க வல்லார்கள் |
– |
புகழ்ந்து ஓதவல்லவர்கள் |
| துன்பம் கடலுள் – |
– |
ஸம்ஸாரஸமுத்ரத்தில் |
| துவளார் |
– |
துவண்டு நோவு படமாட்டார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருவாய்மொழிகற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறாள் இதில் * நிச்சலும் தீமைகள் செய்யும் பெருமானாகிய கண்ணபிரான் விஷயமாகப் பெரியாழ்வார் திருமகளார் அருளிச்செய்த இச்சொன்மாலைகளைப் புகழ்ந்து பாடவல்லவர்கள் ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடமாட்டார்கள் என்கிறாள். “***“ (பஹவோ ந்ருப! கல்யாணகுணா புத்ரஸ்யஸந்திதே) என்னுபடியாக “குணசாலி“ என்று இராமபிரான் புகழ்பெற்றாற்போலக் கண்ணபிரான் “அல்லல் விளைத்த பெருமான்“ என்று புகழ்பெற்றிருப்பனாய்த்து. இவன்செய்யும் தீம்புகள் திருவாய்ப்பாடிக்கு விளக்கிடாற்போலிருக்கு மென்பது தோன்ற “அல்லல்விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கணி விளக்கை“ என்கிறாள். “இவன் தீம்புக்கு இலக்காகாதபோது ஊராக இருண்டு கிடக்குமாய்த்து“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகாண்க.
வில்லைத் துலைத்த புருவத்தாள் – “துலைத்த“ என்னுஞ்சொல் “துலா“ எனற வடசொல்லடியாகப் பிறந்ததென்று கொண்டால், வில்லை ஒத்திருக்கின்ற புருவத்தையுடையவள் என்று பொருளாகும். (துலா-ஒப்பு) பெரியவாச்சான் பிள்ளை இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம்பற்றவில்லை. “தன்னோடு ஸாம்யங் கொண்டாடியிருக்கு மவற்றையெல்லாம் அழிக்கும்படியாயாய்த்து அவயவ ஸோபையிருக்கும்படி. வில்தான் ஒப்பாகப் போராதபடியான புருவத்தை யுடையவள்“ என்றிறே வியாக்கியான ஸ்ரீஸூக்தி. ஆகவே துலைத்த என்பதற்கு, ‘திரஸ்கரித்த‘ என்ற பொருள் கொள்ளத்தாகும்.
English Translation
These words of love by Goda of bow-like eyebrows, the wonderful daughter of Villiputtur’s Lord Vishnuchitta, praise the tormenting Lord, beacon of the cowherd clan. Those who sing it with gusto will escape the ocean of misery.
