(579)
ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்
எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே
பதவுரை
| அளியத்த மேகங்காள் |
– |
அருள்புரியக்கடவ மேகங்களே! |
| ஒளி |
– |
தேஹத்தின் காந்தியும் |
|
வண்ணம் நிறமும் |
||
| வளை |
– |
வளைகளும் |
| சிந்தை |
– |
நெஞ்சும் |
| உறக்கத்தோடு |
– |
உறக்கமும் ஆகிய இவையெல்லாம் |
| எளிமையால் |
– |
என்னுடைய தைந்யமே காரணமாக |
| என்னை இட்டு |
– |
என்னை உபேக்ஷித்துவிட்டு |
| ஈடு அழிய |
– |
என் சீர் குலையும்படி |
| போயின |
– |
நீங்கப்போய்விட்டன. |
| ஆல் |
– |
அந்தோ! |
| குளிர் அருவி |
– |
குளிர்ந்த அருவிகளையுடைய |
| வேங்கடத்து |
– |
திருமலையி லெழுந்தருளியிருக்கிற |
| என் கோவிந்தன் |
– |
எனது கண்ணபிரானுடைய |
| குணம் |
– |
திருக்கல்யாண குணங்களை |
| பாடி |
– |
வாயாரப் பாடிக்கொண்டு (அந்தப்பாட்டே தாரகமாக) |
| ஆவி |
– |
பிராணனை |
| காத்திருப்பேனே |
– |
ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானைப்பிரிந்துவிட்ட துக்கத்தினால் சரீர சோபைமாறி நிறமழிந்து வளைகழன்று நெஞ்சுதளர்ந்து உறக்கமொழிந்து இப்படியெல்லாம் நான் சீர்குலைந்து தடுமாறியிருக்குமிருப்பை என்சொல்லவல்லேனென்கிறாள் முன்னடிகளால். ஒளிவண்ணம் – ஒளிபொருந்தியவர்ணம் என்றுமாம். எம்பெருமானோடு ஸ்பஸ் லேஷிக்கப்பெறுங்காலத்தில் மேனிபுகர்ந்திருப்பதும் பிரிந்துபடுங்காலத்தில் “என் மங்கையிழந்தது மாமைநிறமே“ என்னும்படி வைவர்ணியப்பட்டிருப்பதும் மெய்யன்பர்களின் இலக்கணமாமென்க. மேனி மெலியவே வளைகளும் கழன்றொழியும், நெஞ்சும் உருக்குலையும்.
ளிமையால் – நான் பிராண நாதனால் உபேக்ஷிக்கப்பட்டுத் தனிமையாயத் தளர்ந்துகிடக்கிறேனென்பது காரணமாக ஒளிவண்ணம் வளைசிந்தையுறக்கங்கள் என்னைவிட்டு நீங்கின என்றபடி எளிபாரை எல்லாரும் கைவிடுவது ஸஹஜமே யன்றோ. ஆகவே, எளிமையால் என்றது – என்னிடத்துள்ள தைந்யம் காரணமாக என்றபடியாயிற்று. அன்றிக்கே, ஒளிவண்ணம் முதலியவை என்னை உபேக்ஷித்து விட்டுநீங்கினதற்கு காரணம் தங்களுடைய புன்மையேயாம், ஆபத்தை யடைந்தவர்களை விட்டுநீங்குமவர்கள் நீசர்களேயிறே – என்றதாகவும் கொள்ளலாம். இப்பக்ஷத்தில், எளிமையால் என்றது – தங்களுடைய நீசத்தன்மையினால் என்றபடியாம்.
விஸலேஷகாலங்களில் நாயகனுடைய திருக்கல்ணாகுணங்களைக் கீர்த்தனை பண்ணிக்கொண்டு ஆவிகாத்திருப்போமென்று பார்த்தாலும், ஒளிவண்ணம் விளைசிந்தையொழியும்படி நேர்ந்த இந்ததஸையில் குணகீர்த்தநம்பண்ணித் தரித்திருக்க என்னாலாகுமோ வென்கிறாள் பின்னடிகளில். நாயகனைப் பிரிந்துதளர்ந்திருக்குங் காலத்தில் மேகங்கள் வந்து முகங்காட்டின படியாலே அந்த உபகாரத்தைக் கொண்டாடி “அளிபத்த மேகங்காள்“ என்கிறாள். ஆவிகாத்திருப்பேனே – பிராணநாதன் அவனான பின்பு பிரரணன்களைக் காக்கவேண்டிய கடமை அவன் தலைப்பட்டதேயன்றி எனக்குப் பணியாமோ? என்கை.
English Translation
My luster, my colour, my bangles, my senses and my sleep, –how soon they have left me, alas, destroying my well-being! O Merciful clouds! How long must sustain my spirits, singing the glories of my Govinda, Lord of cool springs- Venkatam?
