(580)

(580)

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்

தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு

என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்

பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே

பதவுரை

ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள்

சரீரத்திலே மின்னல் தோன்றப்பெற்ற மேகங்களே!
என் ஆகத்து

என்மார்விலுண்டான
இள கொங்கை

இளமுலைகளை
தாம் விரும்பி

அவ்வெம்பெருமான் விரும்பி
பொன் ஆகம் புல்குதற்கு

அழகிய தம் மார்வோடே அணையவேணுமென்னும் விஷயத்தில்
நாள்தோறும்

நித்யமும்
என் புரிவடைமை

திருமலையிலே
தன் ஆகம்

தனது திருமேனியில்
திருமங்கை தஙகிய சீர் மார்வற்கு

பிராட்டி எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்பு படைத்தபெருமானுக்கு சொல்லுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய கரிய திருமேனியில் மின்னற்கொடி போன்ற பிராட்டி விளங்கும்படியை நினைப்பூட்டிக்கொண்டு மின்னயெழுகின்ற பேகங்களை! நீங்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே சென்று ஒருவார்த்தை சொல்லவேணும், அதாவது – எம்மார்பிலுள்ள இளமுலைகளை அவ்வெம்பெருமான் விரும்பி அணைந்துகொண்டே இடைவிடாது கிடக்கவேணுமென்று நான் ஆசைப்பட்டிராநின்றே னென்பதை நீங்கள் போய்ச் சொல்லவேணுமென்கிறாள்.

ஆகம் என்று உடம்புக்கும் மார்வுக்கும் பெயர் முதலடியில் ஆகத்து என்றது – உடம்பிலே என்றபடி, மின்னலாலே பரபாகஸோபை பெற்றிருக்கிற உடம்பையுடைய மேகங்களை! என்றவாறு. மேகங்காள்! என்றவிடத்து “நடுவே பெரியவுடையார் (ஜடாயுபக்ஷி) வந்து தோற்றினாற் போலேயிருந்த தீ! அவனைப் பிரிந்து நோவுபடுகிற ஸமயத்திலே நீங்கள் வந்து தோற்றினபடியும்.“ என்றருளிச் செய்வர் பெரியவாச்சான் பிள்ளை. இரண்டாமடியில், தன்னாகம் – தன்னிடத்திலே என்றபடி. “சீர்மார்வற்குச் செப்புமினே“ என்று அந்வயம்.

மற்றையோருடைய முலைபோலல்ல என்னுடைய முலை, அவை ஆறியிருக்கும், இவை “என் விஷயத்தைக் காட்டு, என் விஷயத்தைக் காட்டு“ என்று எப்போதும் பதறினபடியே யிருக்கும் என்பதுதோன்ற என்னாகத்திளங்கொங்கை என்கிறாள் காணும். இளங்கோங்கை – ஒரு வஸ்துவிலே விருப்பமுள்ள இளம்பிள்ளைகளைத் தாய்தந்தையர் எவ்வளவு ஸமாதானப்படுத்தினாலும் ஸமாதாநமடையாமல் விரும்பின வஸ்துவைப் பெற்றல்லது விடாத பிடிவாதங் கொள்வதுபோல் என் முலைகளும் அவ்வெம்பெருமானது திருமார்வோடே அணைந்தே தீரவேணுமென்ற பிடிவாதமுடையன் என்கிறாள் – “சொற்கேளாத பரஜைகளைப் போலேயத்து முலைகளின்படி“ என்பது வியாக்யான ஸ்ரீஸூக்தி கொங்கை. என்றவிடத்து இரண்டாம் வேற்றுமை தொக்கிக் கிடக்கிறது, என்னாகைத்து இளங்கொங்கையை அவர் தாம் நாடோறும் விரும்பித் தமது பொன்னாகத்தாலே புலகுதற்கு என் புரிவுடைமை செப்புமின் என்பதாகக் கொள்க. பொன் ஆகம் – விரும்பத்தக்க திருமார்பு புரிவுமைமை – அன்புடமை, ஆசையுடைமை.

English Translation

O Lighting-spangled dark clouds! Go now to Venkatam and tell me the Lord, whose chest is resplendent with the Lady Sri, that everyday my tender breasts do yearn for the embrace of his golden frame.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top