(576)

(576)

பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்

வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை

ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்

ஆய்ந்தேத்த வல்லா ரவரும ணுக்கரே

பதவுரை

பாஞ்சசன்னியத்தை

–

சங்கை
பற்பநாபனோடும்

–

எம்பெருமானோடே
வாய்ந்த

–

பெருசுற்றம் ஆக்கிய

கிட்டினபேருறவையுடையதாக வார்த்தை சொன்ன

வண் புதுவை

–

அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும்
ஏய்ந்த புகழ்

–

நிறைந்த புகழை யுடையவளும்
பட்டர்பிரான் கோதை

–

பெரியாழ்வாருடையடாள் (அருளிச்செய்த)
தமிழ் ஈர் ஐந்தும்

–

இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
ஆய்ந்து

–

அநுஸந்தித்து
எந்த வல்லார் அவரும்

–

(இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும்
அணுக்கர்

–

(பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லி முடிக்கிறாள் இதில், ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நோக்கி “மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்“ என்றமையால் இச்சங்குதான் எம்பெருமானுக்குக் கிட்டின வுறவுடையது என்று ஆண்டாளுடைய கருத்தாயிருந்தது, அதுதோன்ற அருளிச்செய்கிறாள் – “பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனொடும் வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய“ என்று நெருங்கின பந்துத்வ முடையதாகக் கொண்டு சொன்ன என்றபடி. ஆக்கிய என்ற அடைமொழி கோதைக்குமாகலாம். கோதை தமிழ்க்குமாகலாம். “ஏய்ந்தபுகழ்“ என்ற அடைமொழி பட்டர்பிரானிடத்து அந்வயிக்கத்தகுமாயினும் கோதையிடத்து அந்வயித்தருளினர் பெரியவாச்சான்பிள்ளை. தமிழ் – தமிழாலாகிய பாசுரங்கட்டு ஆகுபெயர்.

ஆய்ந்து ஏத்தவல்லா ரவரும் – இத்திருவாய்மொழி முழுவதும் பாஞ்சஜந்யத்தைப் பற்றிச் சொல்லிற்றேயன்றி எம்பெருமானைப்பற்றி இதில் ஒன்றுமில்லையேயென்று கருதிவிடாமல் இதுவும் எம்பெருமானுடைய பெருமையில்தான் சென்று முடிகின்றதென்று ஆராய்ந்து அநுஸ்திக்கவல்லவர்கள் என்றபடி. எம்பெருமானுடைய திருவாயமுகத்தின் இனிமையும் அவனுடைய ஆச்ரிதபக்ஷபாதமும் இத்திருமொழியில் விளங்கக்காண்க. அணுக்கர் – அன்புடையார், அந்தரங்கர்.

English Translation

This decad of Tamil songs by Goda, daughter of the celebrated Pattarbiran of ancient Puduvai, unities a conch Panchajanya with the Lord Padmanabha in an exalted relationship. Those who sing it with feeling will become devotees of the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top