(575)

(575)

பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்

வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்

சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே

பதவுரை

பெரு செல்வம் சங்கே

பெரிய செல்வம் படைத்தசங்கமே!
பதினாறாம் ஆயிரவர் தேவிமார்

பதினாறாயிரம் தேவிமார்கள்
பார்த்து இருப்ப

கண்ணபிரானுடைய வாயமுதத்தை நாம் பருகவேணுமென விரும்பி) எதிர்பார்த்திருக்கையில்
பொது ஆக உண்பது மாதவன் தன்வாய் அமுதத்தை

பகவத்ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக உண்ணவேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை
நீ புக்கு

நீ யொருவனே ஆக்ரமித்து
மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால்

தேனை உண்கிறாப்போல் உண்டால்
உன்னோடு சிதையாரோ

(மற்றபேர்கள்) உன்னோடு விவாதப்பட மாட்டார்களோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெருஞ்செல்வம் படைத்த சங்கே! நீ அல்லும்பகலும் உண்கிற கண்ணபிரான் தன் வாயமுதமானது உனக்கொருவனுக்கே உரிமைப்பட்டதன்று, அக்கண்ணபிரானுக்கு வாழ்க்கைப்பட்ட பதினாறாயிரம் பெண்கள் இவ்வமுதத்தைப் பருகுவதற்குப் பங்குடையவர்கள். அன்னவர் இதனை அநுபவிக்க அவஸரம் பார்த்திருக்க நீ ஒருவனே மேல்விழுந்து புஜித்தால் அவர்கள் உன்னோடு பிணங்காதிருக்கமுடியுமோ? அவர்களுடைய மனவருத்தத்திற்கு நீ ஆளானாயாகில் உன்னை ஸாதுகோஷ்டியில் மதிப்பாருண்டோ? என்கிறாள்.

நரகாசுரன் தான் மணஞ்செய்து கொள்ளவேணுமென்று அங்கங்கிருந்து தெரிந்து பொறுக்கிக்கொண்டு வந்து திரட்டிவைத்திருந்த கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் கண்ணபிரான் அவ்வசுரனைக் கொன்றொழித்துத் தானே மணஞ்செய்துகொண்டான் னென்பது அறியத்தக்கது.

English Translation

While sixteen thousand godly beauties stand and wait, eager for their turn to enjoy the nectar of Madavan’s lips, you go and drink it up all alone. Will they not quarrel with you, O Good Conch?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top