(546)
வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்
பதவுரை
| கள் அவிழ் |
– |
தேன் பெருகா நின்றுள்ள |
| செண்பகம் பூ |
– |
செண்பகப் பூவிலே |
| மலர்கோதி |
– |
(அஸாரமான அம்சத்தைத் தள்ளி) ஸாரமான அம்சத்தை அநுபவித்து |
| களித்து |
– |
(அதனால்) ஆநந்தமடைந்து |
| இசை பாடும் குயிலே |
– |
(அந்த ஆநந்தத்திற்குப் போக்குவீடாக) இசைகளைப்பாடா நின்றுள்ள கோகிலமே!’ |
| வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட |
– |
சுத்தஸ்வபாவமாய் (கைங்கர்யருசியுடையாரை) அழைக்கு மதான |
|
ஸ்ரீ பாஞ்ச ஜக்யத்தை இடக்கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற |
||
| விமலன் |
– |
பவித்ரனான பரமபுருஷன் |
| உரு |
– |
தனது திவ்யமங்கள விக்ரஹத்தை |
|
எனக்கு காட்டான் எனக்கு ஸேவை ஸா திப்பிக்கமாட்டே னென்கிறான் (அதுவுமல்லாமல்) |
||
|
உள்ளம் என்னுடைய ஹருதயத்தினுள்ளே |
||
| புகுந்து |
– |
வந்து புகுந்து |
| என்னை நைவித்து |
– |
என்னை நைந்து போம் (படி பண்ணி |
|
(அவ்வளவிலே நான்முடிந்து போவதாயிருந்தால் இன்னமும் என்னை ஹிம்ஸிப் பதற்காக முடியவொட்டாமல்) |
||
| நாளும் உயிர் பெய்து |
|
நாள் தோறும் பிராணனைப் பெருக்கடித்து |
| கூத்தாட்டு காணும் |
– |
என்னைத் தத்தளிக்கச் செய்து வேடிக்கை பாரா நின்றான்’ |
|
(நீசெய்ய வேண்டிய தென்னவென்றால்) |
||
| இருந்து |
– |
என் அருகில் இருந்துகொண்டு’ |
| மெள்ளமிழற்றி மிழற்றது |
– |
உன் மழலைச் சொற்களைச் சொல்லி விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ணாமல் |
| என் வேங்கடன் வர |
– |
எனக்காகத் திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் (இங்கே) வரும்படியாக |
| கூவாய் |
– |
கூப்பிடவேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தன்னை எம்பெருமான் நோவு படுத்துகிறபடியை முன்னடிகளில் அருளிச்செய்கிறாள். கார்முகில் போன்ற கரியதிருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தாய், ‘என்னைப் போலே நீங்களும் கைங்கர்யம் பண்ண வாருங்கள்’ என்று அழைப்பது போன்ற முழக்கத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை இடத்திருக்கையிலே ஏந்தியிரா நின்றுள்ள எம்பெருமான் தன்னைக் காண்கையிலே மிக்க ஆசையுள்ள எனக்குத் தன் திருவுருவத்தைக் காட்டாதே மறைத்திடாநின்றான். அவன் இப்படி உபேக்ஷிக்கையாலே அவ்வுருவத்தை மறந்து பிழைப்போம் என்று பார்த்தாலோ, அது செய்யுவும் ஒட்டுகிறிலன்’ என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே வந்துபுகுந்து நினைதொறும் சொல்லுந்தோறும் நெஞ்சிடிந்துகும்” என்கிறபடியே சைதில்யத்தையுண்டாக்கி அந்தத் தளர்த்தியாலே உயிர்மாயுமளவான நிலைமை நேர்ந்தவாறே “இவ்வளவோடு இவளை முடிந்து பிழைக்க வொட்டலாமா? இன்னும் நெடுநாளைக்குத் துன்பம் படுத்தவேண்டாவா?” என்றெண்ணி மறுபடியும் உயிரைச் சிறிது தலையெடுக்கச் செய்து பழையபடியே ஹிம்ஸிப்பதாய் இப்படி துடிக்கவிட்டு இதுவே போதுபோக்காயிரா நின்றான்’ ஓ குயிலே! நான் இப்படி நோவுபடா நிற்க, நீ ஆநந்தமயமாக இசைபாடிக்கொண்டு போது போக்குவது நியாயந்தானா? தேன் பெருகா நின்றுள்ள செண்பகப்பூவில் அஸாரமான அம்சத்தைக்கழித்து ஸாரமான பாகத்தை அநுபவித்து அவ்வநுபவத்தாலுண்டான களிப்பு உள்ளடங்காமல் அதற்குப் போக்குவிட்டு இசைபாடிக் கொண்டிருக்கிறாயே, இதுவோ நன்மை? நான்படும் துயரத்தைப் பாரிஹரித்த பின்பன்றோ நீ களிக்கவேணும் உனக்காக நான் செய்யத்தக்கது என்ன?” என்று கேட்கிறாயோ, எப்போதும் என்னருகேயிருந்துகொண்டு அவ்யக்த மதுரமாக மென்சொற்களைச் சொல்லுவதும் விலாஸ சேஷ்டி தங்களைப் பண்ணுவதுமா யிருக்கிறாயே இந்த இருப்பைத் தவிர்ந்து, பிராட்டியைக் கைப்பிடிப்பதற்காக ஸ்ரீமிதிலையில் புறச்சோலையிலே வந்து தங்கியிருந்தாப்போலே எனக்காகத் திருமலையிலே வந்திராநின்ற பெருமானை இங்ஙனே நாலடி வரும்படியாக நீ கூவவேணும் என்று வேண்டுகிறாள்.
முதலடியில், விமலன் என்றது “??????????????????????” (‘நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம், ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் ப்ரகாசஸே’) என்றபடி திவ்யாயுதங்கள் முதலியவற்றை அடியார் கட்காகவே ஏந்தியிராநின்றோம் என்று நினைத்திருக்கையாகிற ஹருதயசுத்தியை யுடையவன் என்கை. “எனக்கு உருக்காட்டான்” என்கையாலே, மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்யஸூரிகளுக்குக் காட்டுவான் என்ற உபாலம்பம் தோற்றும். வடிவின் வாசியறியாத ஸம்ஸாரிகளுக்குக் காட்டவிருக்கிறானோ? என்றுமாம். உள்ளம்புகுந்து நைவிக்கிறபடி எங்ஙனேயென்னில்’ இங்கே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறபடி பாரிர்-“நெஞ்சிலே புகந்து மறக்கவொண்ணாதபடி பண்ணும்’ ஸந்நிஹிதரைப்போலே ப்ரகாசித்தவாறே அணைக்கக் கைநீட்டி, கைக்குள் அகப்படாமையாலே நோவுபட்டு, பின்னையும் முடிந்து பிழைக்கவும் பெறாதே ‘ணிகபதார்த்தம் போலே முடிவது ஜீவிப்பதாய்க் கொண்டு உருவநோவுபட்டுச் செல்லா நிற்குமாய்த்து’ இப்படி துடிக்கவிட்டு இதுதானே போது போக்காயிரா நின்றான்.” என்று.
நாளும் உயிர் பெய்து ஸ்ரீ முக்கோணங்கட்டிக் குற்றவாளிகளை யடிக்கும்போது உயிர்போகும் தருணமானவாறே சேவகர்கள் அவனுக்குத் தண்ணீர் வார்த்துத் தேறுதலையுண்டாக்கிக் கொஞ்சம் ஸுதாரித்தவாறே பழையபடியே தண்ணீரைக் கொடுத்துத் தேற்றுவித்து அடிப்பார்கள்’ அதுபோல முடியப்போகிற உயிரை மறுபடியும் உண்டாக்கி வருத்துகிறான் என்று அழகிய மணவாளச்சீயர் அருளிச் செய்யும்படி.
செண்பகப்பூ மலர்கோதி ஸ்ரீ இங்கு, பூ என்றது ஸாமாநய சப்தம்’ ஸாரமும் அஸாரமுமான ஸமுதாயம் அதிலே மலர்என்றது ஸாராம்சம். கோதுதல் கொந்துதல். …. …. …. …. …. … (உ)
English Translation
The pure Lord who bears a white conch does not appear, alas! Day by day he torments my heart, and enjoys my dying dance. O Koel sipping honey from the choicest Senbakam flowers with a merry songs! Do not evade me with slippery sweet-talk, go now and call my Venkatam Lord.
