(545)
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய்
பதவுரை
| புன்னை |
– |
புன்னைமரங்களும் |
| குருக்கத்தி |
– |
குருக்கத்திமரங்களும் |
| நாழல் |
– |
கோங்குமரங்களும் |
| செருந்தி |
– |
சுரபுன்னைமரங்களும் (இவை முதலிய பல மரங்கள் நிறைந்த) |
| பொதும்பினில் |
– |
சோலையிலே |
| வாழும் |
– |
வாழுகின்ற |
| குயிலே! – |
– |
கோகிலமே! |
| மன்னு பெரும் புகழ் |
– |
நித்யமாய் அளவில்லாத புகழையுடையவனாய் |
| மாதவன் |
– |
ச்ரிய: பதியாய் |
| மா மணி வண்ணன் |
– |
நீலமணி போன்ற நிறத்தை யுடையனாய் |
| மணி முடி |
– |
நவமணிகள் அழுத்திச் சமைத்த திருவபிஷேத்தையுடையனாய் |
| மைந்தன் தன்னை |
– |
மிடுக்கை யுடையவனான எம்பெருமானை |
| உகர்ந்து காரணம் ஆக |
– |
ஆசைப்பட்டதுவே ஹேதுவாக |
| என் சங்கு இழக்கும் வழக்கு |
– |
என்னுடைய கைவளைகள் கழன்றொழியும்படியான நியாயம் |
| உண்டே? |
– |
(உலகத்தில்) உண்டோ’ (இது வெகு அநியாயமாயிருக்கிறது) |
|
(இதற்கு நான் என் செய்வேன் என்கிறாயோ) |
||
| என்பவளம் வாயன் |
– |
பவளம் போற் பழுத்த திருவதரத்தை யுடையனான எனது துணைவன் |
|
வர (என்னிடம்) வந்து சேரும்படி |
||
| எப்போதும் |
– |
இரவும் பகலும் |
| பன்னி இருந்து |
– |
(அவனது திருநாமங்களைக்) கத்திக் கொண்டிருந்து |
| விரைந்து கூவாய் |
– |
சீக்கிரமாகக் கூவவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகத்தில் அனைவராலும் பழிக்கப்பட்டவனாயும் பிச்சைக்காரனாயும் கண்கொண்டு காணவொண்ணாத விகாரமான ரூபத்தையுடையவனாயும் அனைவர்க்கும் கீழ்ப்பட்டவனாயுமுள்ள ஒரு காபுருஷனை நான் ஆசைப்பட்டடேனாகில் எக்கேடுகெட்டாலும் பாதகமில்லை’ நான்கு திசைகளிலும் பரவியநித்ய கீர்த்தியையுடையவனாய் ஸாக்ஷாத் திருமாமகள் கொழுநனாய் கண்டார்கண்களைக் கவரும்படியான நீலமணிபோன்ற நிறத்தையுடையனாய் ‘அனைவரையும் ரக்ஷித்தருளக்கடவேன்’ என்று முடிகவித்துக் கொண்டிருப்பவனாய் நினைத்தபடிசெய்து முடிக்கவல்ல வலிவு படைத்தவனான எம்பெருமானை நான் ஆசைப்பட்டு இக்கேடு கெடுகிறேனே! இது நியாயந்தானா? இங்ஙனேயோ உலகநீதியிருக்கும்படி! என்கிறாள் முன்னடிகளில். (என்சங்கு இழக்கும் வழக்கு உண்டே?) சங்கு இழத்தலாவது – கைவளை கழன்றொழிகை’ தலைமகனைப் பிரிந்து வருந்துவதனால் உடம்பானது ஈர்க்குப்போல க்ருசமாய்ப் போக ‘கைகளிற் பொருத்தமாக அணியப்பட்ட வளைகளும் அவலீலையாகக் கழன்றுவிழும்: – ?????????? ???????? யாமி நயாமீதி தவே வததி புரஸ்தாத்‘ணேந தந்வங்க்யா:- களிதாநி – புரோவலயாநி அவராணி புநஸ்ததைவ தளிதாநி.”) என்ற ச்லோகத்தின் தாற்பாரியம் இங்கே நினைக்கத்தகும். அதாவது தலைமகன் தலைமகளை நோக்கி, ‘என்கண்மணி! நான் உன்னைப் பிரிந்து ஓர் ஊர்க்குச் செல்கின்றேன்’ என்று சொன்ன நொடிப்பொழுதிலேயே அவளுடைய கையில் அணியப்பட்டுள்ள வளைகளில் முன்னேயிருந்த வளைகள் கழன்று கீழே வீழ்ந்தன’ அதனைக்கண்ட தலைமகன் ‘இவள் நமது விரஹத்தைப் பொறுத்திருக்க வல்லளல்லளாகையாலே இவளைப்பிரிந்து நாம் வெளியேறலாகாது’ என்று நினைத்து உடனே ‘நான் போகவில்லை’ என்று சொல்லவே அச்சொல் செவிப்பட்ட நொடிப்பொழுதிலேயே கையில் நின்றும் கழன்றவைபோக நின்ற வளைகள் படீல் என்று வெடித்துத் துகளாய் விழுந்தன – என்பது மேற்காட்டிய ச்லோகத்தின் கருத்து. நாயகனுடைய விரஹம் ப்ரஸ்தாவத்தில் வந்தமாத்திரத்திலேயே நாயகியனது உடல் மிகவும் மெலிந்து போம் என்பதும், அந்த விச்லேஷ வார்த்தை மாறினவாறே உடம்பு பூரித்துக்கிடக்க ப்ராப்தமாயிருக்க, இப்படி பிரிந்து மெலிந்து வருந்துகை தகுதிதானா? என்றவாறு.
அவன் என்னை ஆசைப்பட்டு இப்பாடுகள் படவேண்டியிருக்க, நான் அவனை யாசைப்பட்டு வருந்த வேண்டும்படி விதிவகை விபாரிதமாயிற்றே! என்று வருந்துகிறாள் எனினுமாம். அவனது திருவடித் தாமரைகளிலே தலைசாய்த்த பின்பு அவ்வடியார்க்கு நேரும் துயரங்களை அவ்வெம்பெருமான்றானே அநுபவிக்கக் கடவனாயிருக்க அதுவிபாரிதமாய் நானோ துயர்பபடக்கடவேன் என்கிறாள் என்றலுமாம். பாரதயுத்தத்தில் அர்ஜுநன் மேலே விழவந்த அம்பைக் கண்ணபிரான் அவனைத் தள்ளித் தான் ஏற்றுக்கொண்டான் என்று ப்ரஸித்தமிறே. – பார்த்தம் ஸஞ்சாத்ய மாதவ:- உரஸா ப்ரதிஜக்ராஹ” என்றதிறே.
வழக்குண்டே? ஸ்ரீ வழக்காவது-நியாயம் “அறிவினால் குறைவில்லா அதன் ஞாலத்தவரறிய, நெறி யெல்லாமெடுத்துரைத்த நிறை ஞானத்தொருமூர்த்தி” என்றபடி நியாயங்களை யெல்லாம் ஓதிவைத்த அவனே இப்படி அநியாயஞ்செய்யத்தலைப்படுவது தகுதிதானோ? ‘தன்னையாசைப் பட்டவர்களுக்கு வளையிழந்து நிற்கைதான் பலன்’ என்று இப்படி ஒரு நியாயம் அவன் தந்த சாஸ்திரங்களிலே உண்டோ? என்கிறாள். (‘நவாஸுதேவ பக்தாநாம் அசுபம் விதயதே க்வசித்’) என்றும், “கௌந்தேயு! ப்ரதிஜாநீஹி நமே பக்த: ப்ரணச்யதி’) என்றும் ‘????????????’ அவன் தந்த சாஸ்திரங்களிலே கேட்டுப் போருகிறேமத்தனை யொழிய, “வைகுந்த னடிபணிந்தார் வளையிழந்து வருந்துவரே” என்பதாக ஓரிடத்திலும் கேட்டதில்லையே இன்றளவும் – என்கிறாள் போலும்.
இனி மூன்றாமடி கோகில ஸம்போதநம். குயிலே! நான் இப்பாடு பட்டுக் கிடக்க என்னைப் போலே நீயும் வருந்துவதோ அல்லது என் வருத்தத்தைப் பாரிஹரிப்பதோ செய்யவேண்டியிருக்க, புன்னையும் குருக்கத்தியும் நாழலும் செருந்தியுமாய் அமைந்த படுக்கையிலே இனிதாக வாழ்கின்றாயே! இதுதகுதிதானோ? மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ என்றிருக்கிற என் முன்னேயோ நீ இப்படி களித்துவாழ்வது! என்ற உபாலம்பம் தோற்ற ஸம்போதிக்கிறாள். நாழல் ஞாழல்’ (போலி.) இது வடமொழியில் ??????? என்றும் (பலிநீ) ????????? என்றும் வ்யவஹாரிக்கப்படும்: (கோங்குமரம்,) பொதும்பு – பொந்து.
அக்குயில் செய்யவேண்டியதை நியமிக்கிறாள் ஈற்றடியில் ஒருகால் சொல்லி ஓய்ந்து விடாமல் அவன் திருவுள்ளத்திலே படும்படி பலகாலும் சொல்லி, ஆனை யிடா;ப்பட்ட மடுவின்கரையிலே அரைகுலையத் தலைகுலைய வந்துவிழுந்தாப் போலே விரைந்தோடிவந்து என்னோடே ஸம்ச்லேஷிக்கும் படியாக அவனைக் கூவவேணு மென்று வேண்டுகிறாள். “என்பற்நாபன் வரக்கூவாய்’ என்றாவது “என்பரம்புருடன் வரக்கூவாய்” என்றாவது மற்றுமுள்ள திருநாமங்களை யிட்டாவது சொல்லாமல் ‘என் பவளவாயன்” என்ற ஸ்வாரஸ்யத்தைநோக்கிப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச் செய்கிறார் என்னோடே கலந்து போகிற ஸமயத்தில் அணைத்து ஸ்மிதம்பண்ணி, வருமளவும் ஜீவித்திருக்கும்படி விளைநீரடைத்துப் போனபோதைச் செவ்வியோடும் அதரத்தில் பழுப்போடும் வந்தனைக்கும் படியாகக் கூவப்பாரா யென்கிறாள்” என்று. …. …. …. (க)
English Translation
The world-renowned gem-Lord Madavan is a crowned emperor. I loved him and lost my bangles, is this fair? O koel haunting the Punnai, Kurukkatti, Nalal and Serundi groves! Go now quickly to my Lord of coral lips and tell him to come.
