(538)

(538)

மாட மாளிகை சூழ்மது ரைப்பதி

நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு

ஓடை மாமத யானை யுதைத்தவன்

கூடு மாகில்நீ கூடிடு கூடலே


பதவுரை

ஓடை

நெற்றிப் பட்டத்தையுடைத்தாய்
மாமதம்

மிக்க மதத்தையுடைத்தான
யானை

(குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன்

உதைத்து முடித்த கண்ணபிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி

மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி

(நம்வீட்டைத்) தேடிக்கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு

நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில் –

(நம்மோடு) கட்டுவானாகில்

கூடலே! நீ கூடிடு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குவாலயாபீடமென்னும் மதயானையை முடித்தருளின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.-வில்விழாவென்ற வ்யாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீக்ருஷ்ய பலராமர்கள் கம்ஸனுடைய அரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவ்வரண்மனைவாசல் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீட மென்னும் மதயானை கோபித்துவர, அவ்யாதவ வீரர்  அதனைஎதிர்த்து அதன்தந்தங்களிடையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து அவ்யானையை உயிர்தொலைத்துவிட்டு உள்ளே போயினர் என்றவரலாறு இங்குணரத்தக்கது.

இரண்டாமடியின் இறுதியிலுள்ள வந்திட்டு என்ற வினையெச்சம்-உதைத்தவன் என்பதிலே அந்வயிப்பதல்ல’ கூடுமாகில் என்பதிலே அந்வயிக்கக்கடவது. இப்போது, கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் இருப்பதாகவும், இவ்வாண்டாள் தான். வடமதுரையிலே யிருப்பதாகவும் பாவநப்ரகர்ஷம் செல்லுகிறபடி. மதுரைப்பதிக்கு “மாடமாளிகைசூழ்” என்று விசேஷணமிட்டஸ்வாரஸ்யத்தைக் கண்டறிந்த பெரியவாச்சான்பிள்ளை ரஸோக்தியாக அருளிச்செய்கிற ஸ்ரீஸூக்திகளைக் காணீர்- “அவன் வில்விழவுக்கென்று கோடித்தான்’ இவள் இவன் வரவுக்கென்றிருக்கிறாள்”.

“மதுரைப் பதியிலே நந்தெருவின் நடுவே வந்திட்டு” என்னுமளவே போது ம.யிருக்க, நாடி என்று விசேஷித்து அருளிச்செய்கையாலே, கண்ணபிரான் நேரேவந்து என் வீட்டில் புகுரலாகாது’ நாச்சியார் திருமாளிகை எது? நாச்சியார் திருமாளிகை எது?” என்று ஊரெங்கும் விசாரித்துக்கொண்டு தேடிவரவேணுமென்னும் ஆவல் தோற்றும்.

“நம் தெருவின் நடுவே” என்றவிடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்-“திருவாய்ப்பாடியடையத் தன்னதானாப்போலே இங்கும் ஒருதிருமாளிகையுண்டு’ உகந்தருளின் விடமெங்கும் ‘தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வேச மாநுஷீ என்கிறபடியே ஒரோ திருமாளிகை யுண்டு” என்று,- மதுரைப் பதியிலே ஆண்டாளுக்கென்று ஒரு தெருவும் திருமாளிகையுமுண்டோ? என்று பிறக்கும் சங்கைக்குப் பதிஹரமாக இஃது அருளிச்செய்தபடி, ஆனால், பலச்ருதி சொல்லும் ஈற்றுப்பாட்டில் “ஆய்ச்சியர் கூடலைக் குழற்கோதை முன்கூறிய” என்றருளிச்செய்திருத்தலால் இத்திருமொழி முழுதும் ஆய்ச்சியர் பாசுரமேயொழிய ஆண்டாள் பாசுரமன்றென்றும், அநுகாரமாத்ரமே என்றும், ஆகவே நம்தெரு என்றவிடத்து நம் என்றது ஆய்ச்சியரையே யன்றி ஆண்டாளை யன்று என்றும் கொள்ளவேண்டுகையாலே பொரியவாச்சான் பிள்ளை அங்ஙனே அருளிச்செய்கைக்கு ப்ரஸக்தி? என்று சிலர் சங்கீக்கக்கூடும்’ வஸ்துத: ஆய்ச்சியர் கூடலைக் குழற்கோதை அநுகரித்துக் கூறினளாயினும்’ கோதையாயிருக்குந் தன்மையும் கூடவே அநுஸந்தேயம். அப்படியில்லாவிடில் ஆண்டாளுக்குக் கவனசாதுரியம் மாத்திரம் ஏற்பட்டதாகுமே யொழிய பாவவ்ருத்தியில் பாரிபாகமென்பது சிறிதும் ஏற்படாமற்போகும். பாவநாப்ரகர்ஷத்தாலே அநுகாரம் முற்றிற்றென்னா தானான தன்மைலோபிக்க மாட்டாதென்க. இனி நம் என்பதற்கு ஆய்ச்சியரையே பொருளாகக்கொண்டாலும் அவர்கட்குத்தான் மதுரைப் பதியில் வீதியுண்டோவென்று ஆராய்க.

ஓடை என்று யானையின் நெற்றிப்பட்டத்துக்குப் பெயர் …  …  (ரு)

English Translation

Krishna entered the city of Mathura and killed the rutted elephant Kuvalayapida. I wish he comes here now and, inquiring of me, finds his way to my street. If he will come, then join, O Lord-of-the-circle.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top