(537)
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்த னார்வரில் கூடிடு கூடலே
பதவுரை
| ஆய்ச்சிமார்களும் |
– |
இடைச்சிகளும் |
| ஆயரும் |
– |
இடையரும் |
| அஞ்சிட |
– |
பயப்படும்படியாக, |
| பூத்த நீள் கடம்பு ஏறி |
– |
புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி |
| புக பாய்ந்து |
– |
(அங்கு நின்றும்எழும்பிக்குதித்து) |
| வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய |
– |
நர்த்தனஞ் செய்த |
| கூத்தனார் வரில் கண்ணபிரான் வரக்கூடுமாகில் |
– |
பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான |
|
கூடலே! கூடிடு- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- காளியநாகத்தின் கொழுப்பையடக்கின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள். ஒரு நாள் க்ருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சாரியாக வழியே போகத்தொடங்க, மற்ற இடைப்பிள்ளைகள் அழைத்து ‘க்ருஷ்ணா! அவ்வழி நோக்கவேண்டா’ அவ்வழியிற் சென்றால் யமுநாநதியில் ஒர்மடுவில் இருந்து கொண்டு அம்மடுமுழுவதையும் தன்விஷாக்நியினாற் கொதிப்படைந்த நீருள்ள காய்ப் பாநத்துக்கு அநர்ஹமாம்படி செய்த காளிய னென்னும் கொடிய ஐந்தலைநாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்து கொண்டு அணுகினவர்களனைவரையும் பிணமாக்கிவிடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்’ என்ன’ அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிநாகத்தைத் தண்டிக்கவேண்டுமென்ற திருவுள்ளங் கொண்டு அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து, அந்நாகத்தின் படங்களின் மேல் ஏறித் துவைத்து நாக்கநஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலியபிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கிப் பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.
“ஆய்ச்சிமார்களு மாயருமஞ்சிட நடமாடிய” என இயையும். “அஞ்சிடக் கடம்பேறிப்புகப்பாய்ந்து” என்று இயைக்கவுமாம். வாய்த்தவகாளியன் ஸ்ரீ கண்ணபிரான் தன்முலையிலே நடமாட வேணுமென்று இவள் விரும்புமதை அக்காளியன் தலையிலே பெற்றமைக்கு உகந்து, வாய்த்த என்கிறாள்’ பெண்ணாய்ப் பிறவாதே காளியனாய்ப் பிறந்தேனாகில் இந்த பாக்கியம் பெறலாமே’ அம்ருதம் பொதிந்த முலைகள் பெறாத பாக்கியத்தை விஷம் பொதிந்தவன் தலை பெற்றதே! இதென்ன பாக்கியம்! என்று உள்குழைகின்றமை “வாய்த்த” என்ற சொல் நயத்திலே தெரியும். ‘காளியஸ்ய பணமாம் சிரஸ்து மே ஸத்கதம்ப கிகாத்வ மேவவா-வஷ்டி ஜுஷ்ட வநசைல ஸுந்தா’. த்வத் பதாப்ஜயுக மர்ப்பிதம் யயோ:’ என்று ஸுந்தரபாஹு ஸ்தவத்திலே ஆழ்வா னருளிச் செய்த ச்லோகம் இங்கே ஸ்மரிக்கத்தக்கது. (கண்ணபிரானுடைய திருவடியின் ஸ்பர்சம் பெறும்படியான பாக்கியம் பெற்ற காளியன் தலையாகாது, கடம்பமரத்தின் உச்சியாகவாவது என்தலை ஜந்மமெடுக்க விரும்புகின்ற தென்பது இந்த ச்லோகத்தின் தாத்பர்ய ஸங்க்ரஹம்.) நடம்-நடநம் என்ற வடசொல்லின் கடைக்குறை.
கூத்தனார் வரில் ஸ்ரீ அக்காளியன் தலையிலே நடமாடின ச்ரமத்தோடே தன் பக்கல் வந்தணையவேணுமென்று விருப்பம்போலும் …. … … (ச)
English Translation
Men and women of the cowherd clan watched in awe, when Krishna climbed the tall Kadamba tree, and then leapt on the serpent Kaliya’s hood. If the dancer Lord will come, then join, O Lord-of-the-circle.
