(536)
பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்அணி வாணுதல் தேவகி
மாம கன்மிகு சீர்வசு தேவர்தம்
கோம கன்வரில் கூடிடு கூடலே
பதவுரை
| பூ மகன் |
– |
பூலிற்பிறந்தபிரமனும் |
| வானவர் |
– |
நித்யஸூரிகளும் |
| புகழ் போற்றுதற்கு |
– |
கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு |
| ஆம் |
– |
தகுந்த |
| மகன் |
– |
புருஷோத்தமனாய், |
| அணி வாள் நுதல் தேவகி |
– |
மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய |
| மா மகன் |
– |
சிறந்த புத்திரனாய், |
| மிகு சீர் வசுதேவர் தம் |
– |
மிகுந்த, நற்குணங்களையுடையரான வசுதேவருடைய |
| கோ மகன் |
– |
மாட்சிமைதங்கிய புத்திரனான கண்ணபிரான் |
| வரில் |
– |
(என்னை அணைக்க) வருவானாகில் |
|
கூடலே! கூடிடு- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான்முகனும் நித்யஸூரிகளும் போற்றும்படியாக அங்கே எழுந்தருளியிருந்து, பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மண்ணின் பாரம் நீக்குவதற்கே வடமதுரையிலே வந்து தேவகிக்கும் வஸுதேவர்க்கும் புதல்வனாய்த் திருவவதரித்தருளின எம்பெருமான் இன்று என் துயர்தீர இங்கே எழுந்தருளக் கூடுமா என்று மநோரத்திக்கிறாள்.
“பூமகன் வானவர் (இவர்களெல்லாரும்) புகழ்போற்றுதற்கு ஆம் மகன்” என இயைத்து உரைக்கப்பட்டது. அன்றியே, புகழ் என்பதை வானவர்க்கு விசேஷணமாக்கி, ”?????????????????????????????????? “ ‘(தத் விப்ராஸோ விபந்பவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே’) என்றும், (‘யத்ரர்ஷய: ப்ரதமஜா யே புராணா:’) என்று மித்யாதி ச்ருதிவாக்யங்களாலே புகழப்பட்ட வானவர்கள் – என்று பொருள் கொள்ளுமாம்: பூமகன் என்றது உபலக்ஷணமாகி இந்தவிபூதியைச் சொல்லிற்றாய், வானவர் என்றது அந்த விபூதியைச் சொல்லிற்றாய்க் கொண்டு, ஓர் ஆற்றின் நடுவே போகிற வோடத்தை இருகரையிலுள்ளாரும் அழைக்குமா போலே இரண்டு விபூதியி லுள்ளாராலும் போற்றப் பட்டவன் என்க. “ ??????????????? “ (‘நாவேவ யாந்தமுபயே ஹவந்தே’) என்ற வேதவாக்கியம் இங்கே ஸ்மரிக்கத்தகும். “போற்றதற்கா மவன்” என்று ப்ராசீநபாடமென்பர். ஆமவன்-தகுதியானவன் என்கை. இவ்விடத்தில் வியாக்கி பானத்தால் பாட் நிர்த்தாரணம அசக்யம்’ அரும்பதவுரைகாரர் மாத்திரம் “ஆம்மகன்” என்று கொண்டு விவரிக்கிறார் ஆயினும் “ஆமவன்” என்ற பாடமே சிறக்குமென்று அஸ்மதாசார்யர் அருளிச் செய்யும்படி. இப்பாடத்தில் எதுகைநயமும் குன்றாது.
அணிவாள் நுதல் தேவகி-ஸாக்ஷாத் பரமபுருஷன் வந்து பிள்ளையாகப் பிறந்தமையாலுண்டான ஸந்தோஷமிகுதியால் தேவகியின் முகம் மிக்கவொளி பெற்று விளங்கியவாறு. “தேவகிமகன்” என்னாதே “தேவகி மா மகன்” என்கையாலே- கண்ணபிரானுடைய திருவளர்த்தியைக் கண்டவர்கள் ‘இவன் தேவகியின் புத்திரனல்லன், உடன் பிறந்தவனாக இருக்கக்கூடும்’ என்று சங்கிக்கும்ப யிருந்தமையால் அப்படிப்பட்ட திருவளர்த்தியுண்டாகும்படி அவளால் வளர்க்கப்பெற்றவன் என்ற கருத்துத் தோற்று மென்ப.
மிகுசீர் வசுதேவர்தம் கோமகன்- இங்கேவ்யாக்யாநஸ்ரீஸூக்தி:- (“கோமகன்) கோவான் மகன்’ சக்ரவர்த்திக்குப் போலே நியாம்யனல்லன்’ இவர் தம்மையும் நியமிக்கும் மகன். ஆவரை நியமிக்கையாவது-கம்ஸபயத்தாலே ‘இவனுக்கு என்வருகிறதோ’ என்று அவர் வயிறுபிடித்தால் ‘அப்பரே! நீர் ஏன் பயப்படுகிறீர்? அஞ்சாதே நான் சொல்வதைக்கேட்டு ஸுகமேயிரும்’ என்றாப்போலே நியமிக்கை.” கோ-ஸ்வாமி’ நியாமகன்.
கோமகன் வரில் கூடிடு கூடலே!- அப்படிப்பட்ட கண்ணபிரான் என்னிடம் வரும்படியான பாக்கியம் வாய்க்கவேணுமென்ற மநோத தம் உள்ளுறைவால் என்கையாலே வரும்போதை நடையழகு காண்கையிலே அபிநிவேச முற்றதென்ப. (“கூடிடு கூடலே!.) நீ கூடி என்னையுமவனைங்கூட்டு” என்பது வ்யாக்யாநஸ்ரீஸூக்தி. …. …. …. …. (ங})
English Translation
The Lord praised by Brahma and the celestials, is the illustrations son of beautiful Mother Devaki, and the darling prince of the noble father Vasudeva. If he will come, then join, O Lord-of-the-Circle.
