(450)

(450)

ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்துஎன் னுள்ளே

பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து

போதில் கமலவன் னெஞ்சம் புகுந்தும்என் சென்னித் திடரில்

பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

பீதக ஆடை பிரானர்

திருப்பீதாம்பரத்தையுடையவனான எம்பெருமான்
பிரமகுரு ஆகிவந்து

ப்ரஹ்மோபதேசம் பண்ணக்கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி
போது இல்

அறிவுக்கு இருப்பிடானதும்
அல்

இந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையையுடையதுமான
நெஞ்சம் கமலம்

ஹ்ருதய கமலத்தினுள்
புகுந்து

பிரவேசித்து
ஏன் உன்

எனது (அந்த) ஹிருதயத்தில்
ஏதங்கள் ஆயின எல்லாம்

தோஷங்களாக இருப்பவற்றையெல்லாம்.
இறங்கவிடுவித்து

நீக்கி
என்

என்னுடைய
சென்னித்திடரில்

தலையினிது
பாத விலச்சினை

ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார்

எறியருளப்பண்ணினான்

பண்டு அன்று பட்டினம் காப்பு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-ஸர்வேச்வரத்வத்திற்கும் புருஷோத்தமவத்திற்கும் இலக்கணமாகிய திருப்பீதாம்பரத்தைத் திருவரையில் அணிந்துள்ள ஸர்வேச்வரன் ஞானோபதேசம் பண்றுகிற ஆசாரியாக என் நெஞ்சினுள் வந்து புகுந்து தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியபுத்தி, அய்யகேஷாதபுத்தி, ஸ்லரக்ஷண பரத்வம், ஸ்வப்ரயோஜகபாத்யா முதலிய மனக்குற்றங்களை ஒழித்து அவ்வளவிலும் பர்யாப்திபெறாமல் தனது திருவடிகளை இலச்சினை படும்படி என் தலைமேல் அமைத்து இவ்வாறு பரமோகபாரம் பண்ணியருளினனாதலால், இவ்வாத்துமா பண்டுபோலன்றி இப்போது குறைவற்ற காப்பை அடைந்திராநின்ற தென்கிறார்.

இறங்கலிடுவித்து – (தான் இருந்த இடத்தில் நின்றும்) இறங்கச்செய்து என்றபடி. பிரமகுரு -***-. பிரமம் என்ற இங்க ஞனாத்தைச் சொல்லுகிறது. ***-***-***-***-***-***-***-***- என்றது உணரத்தக்கது. மூன்றாமடியில், போது -***- என்ற வடசொற் சிதைவு. திடர் – மேடு. திருவடிகள் ஏறவொண்ணாதமேட்டில் அத்திருவடிகளை ஏற்றியருளினான் என்ற சமத்காரந்தோற்றச் “சென்னித்திடரில்” என்றனரென்க. (பாதவிலச்சினை வைத்தார்) தோளுக்குத் திருவாழியிலச்சினை யிட்டதுபோலத் தலைக்குத் திருவடியிலச்சினை யிட்டனனென்க. இனி, திருவாழியிலச்சினை தலையிலுமுண்டென்க; ‘ஒரு காலிற்சங் கொருகாலிற்சக்கர முள்ளடிபொறித்தமைந்த , இருசாலுங் கொண்டங்கங் கெழுதினாற்போலிலச்சினை படநடந்து” என்றதும்-, “***-***-***-***- ***-***-***-***- ” என்றதும் அறியத்தக்கது.

English Translation

Purging me of my past karmas, the Lord of yellow vestments came as my Guru and entered into my being. Residing in my lotus-heart, he stamped his footprint on my forehead too. No more like old, the fortress is on guard!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top