(448)

(448)

உற்ற வுறுபிணி நோய்காள் உமக்குஒன்று சொல்லுகேன் கேண்மின்

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்

அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினை காள்உமக்கு இங்குஓர்

பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

உற்ற

–

நெடுநாளாக இருக்கிற
உறுபிணி

–

மிக்க வருத்தத்தைச்செய்கிற
நோகாள்

–

நோய்களே!
உமக்கு

–

உங்களுக்கு
ஒன்று

–

ஒருவார்த்தை
சொல்லுகேன்

–

சொல்லுகிறேன்:
கேண்மின்

–

கேளுங்கள்;

(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது)

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்

–

பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளியிருக்கைக்கு இடமான
திருக்கோயில்

–

திருக்கோயிலாயிற்று;
கண்டீர்

–

முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் ) பாருங்கள்;
ஆழ்

–

(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை கான்

–

ஓ கொடுமைகளே!
இன்னம்

–

மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்

–

அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு

–

உங்களுக்கு
இங்கு

–

இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை

–

ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்

–

(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.

பண்டு அன்று பட்டினம் காப்ப

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-யசோதைப்பிராட்டிக்கு அடங்கி நடந்த ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு எளியனாய்நின்று தானுகந்தருளின நிலங்களிலுள்ள அன்புகொண்டு என் தேஹத்தில் எழுந்தருளியிருக்கிறான்; இதை ப்ரத்யக்ஷமாகக் காணுங்கோளென்று நோய்களுக்குக் கூறி, பிறகு அந்நோய்களுக்குங் காரணமான பாபங்களை நோக்கி மீண்டும் ‘உங்களுக்காகத் தீர்ந்த ஒரு விஷயங்சொல்லுகின்றேன்: அதாவது- என்னுடைய தேஹம் முன்போலன்றி ஸ்ரீகிருஷ்ணன் குடிபுகுந்ததனால் காவல்பெற்றிருக்கின்றது; ஆகையால் இந்த தேஹத்தில் நீங்கள் நிராசையாய்ப் போய்விடுங்கள்’ என்றருளிச் செய்கிறார்… … (சு)

English Translation

O Ye great miserable sicknesses! Listen, Let me tell you something. Know that this, my body, is a temple where the cowherd-Lord resides. O Deep-rooted miseries, let me repeat; you have not place here, know it. So more on. No more like old, the fortress is on guard!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top