(443)

(443)

நெய்க்குடத் தைப்பற்றி ஏறும் எறும்புகள் போல்நிரந்து எங்கும்

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெறஉய்யப் போமின்

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்

பைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

நெய்க்குடத்தை

–

நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி

–

பற்றிக்கொண்டு
ஏறும்

–

(அக்குடத்தின்மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்

–

எலும்புகளைப் போல்
எங்கும்மிரந்து

–

என்னுடைய உடம்பு முழுவதும் பாலி
கைக்கொண்டு

–

(என்னை) வசப்படுத்தி

நிற்கின்ற (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற

நோய்காள்

–

வியாதிகளே!
காலம்பெற

–

விரைவாக

உய்ய (நீங்கள்) பிழைக்க வேண்டி

போமின்

–

(என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய்விடுங்கள்
வேதம் பிரானார்

–

(பிராமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட

–

பரம்பினை படங்களையுடைய
பாம்பு அணையோடும்

–

திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட

எந்து புகுந்து  எழுந்தருளி

மெய்

–

(எனது) சரீரத்தை
கொண்டு

–

(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம்பற்றி
கிடந்தார்

–

(என் சரீரத்தை
கொண்டு

–

(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம்பற்றி
கிடந்தார்

–

(என் சரீரத்தினுள்ளே) பள்ளிகொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்

–

(அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இல்லலாத்துமா
பண்டு அன்று

–

பழைய நிலைமையை உடையதன்று;

காப்பு (அவனால்) காக்கப்பெற்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அந்நிஹோத்ரஸமாராதநாதிகளுக்கு உதவும்படி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெய்க்குடத்தை எறும்புகள் ஏறி ஆக்கிரமிப்பது போல, எம் பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகைக்கென்று சேமிக்கப்பட்டிருக்கின்ற எனது உடலை ஆக்கிரமித்துக்கொண்டு, நான்  உங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்படி என்னைக் கையாளாக்கிக்கொண்டு சாச்வதப்ரதிஷ்டையாக நின்றின்ற நோய்களே! இனி இவ்வாத்துமா உங்களுடைய ராஜ்யமன்று; இத்தனை நாளும்போல்ல இந்நாள்; எம்பெருமான் தனது படுக்கையோடுங்கூட விரும்பிப் பள்ளிகொண்டிருக்குமிடமாயிற்று இன்று இவ்வாத்துமா; ஆன பின்பு, அவனது காவலில் அகப்பட்ட இவ்வுடலிடத்து இனி உங்களுக்குப் பிழைத்திருக்க வழியில்லை; இன்னுஞ் சில நாளளவும் பிழைத்திருக்கு வேணுமொன்றவிருப்ப முங்களுக்கு உளதாகில்,இவ்விடத்தைவிட்டுச் சடக்கென ஓடிப்போங்கள் என்கிறார்கள்.

“பாம்பனையோடும் வந்து புகுந்துகிடந்தார்” என்றதனால், நித்யவாஸத்துக்காக எழுந்தருளினமை விளங்கும். பட்டினம்-  வதந மென்ற வடசொல் விகாரம்; ராஜதாநி என்பது பொருள்; ஆத்துமா எம்பெருமானுடைய ராஜதானியாதலறிக.

English Translation

O Ye sicknesses that plague the soul like a swarm of ants over a pot of Ghee! Flee and save yourselves. The Lord of the Vedas has entered my body and made it his abode, reclining on a serpent bed. No more like old, the fortress is on guard!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top