(428)
தண்ணென வில்லை நமன்த மர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதேஉன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
பதவுரை
| மண்ணொடு |
– |
பூமியும் |
| சீரும் |
– |
நலமும் |
| வரியும் |
– |
தேஜஸ்ஸும் |
| காலும் |
– |
வாயுவும் |
| ஆகாசமும் |
– |
ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்) |
| மற்றும் ஆகி நின்றாய் |
– |
மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே! |
| அண்ணலே |
– |
ஸர்வ ஸ்வாமியானவனே! |
| அரக்கத்து அரவ |
– |
அணைப்பள்ளியானே; |
| யமன் தமர்கள் |
– |
யமகிங்கரர்கள் |
| ததண்ணளவு இல்லை |
– |
இரக்கமற்றவர்களாய்க் கொண்டு |
| சால |
– |
மிகவும் |
| கொடுமைகள் |
– |
கொடிய சிஷைகளை |
| செய்யா நிற்பர் |
– |
பண்ணுவர்கள்; |
|
(அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.) |
||
| எண்ணலாம் போதே |
– |
அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே |
| உன் நாமம் எல்லாம் |
– |
உன்னுடைய திருநாமங்களையெல்லாம். |
| எண்ணினேன் |
– |
அநுஸந்தித்தேன் (ஆதலால்) |
| என்னை |
– |
அடியேனை |
| நீ |
– |
நீ |
| குறிக்கொண்டு |
– |
நினைவுள்ளற்றிக் கொண்டு |
| என்றும் |
– |
எப்போதும் |
| காக்க வேண்டும் |
– |
காத்தருள வேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – தண்னானவு குளிர்ச்சி, ‘தண்ணேன’ என்றனுக்கருதி ஈர நெஞ்சு அற்றவர்களென்றவாறு . அன்றி ‘தண்ணனவு’ என்று கணிதலைச் சொல்லிற்றாய் ( தணிகள்-ஓய்தல்) கவிதையில் ஒழிவில்லாமையைக் கூறியவாறுமாய் சால
உரிச்சொல். (மண்ணோடு இந்தியாகி.) இவ்வொற்றுமை ப்ரகாரப்காரியான நிபர்தாம் …
English Translation
O Lord of Srirangam reclining on a serpent bed! Yama’s agents are heartless brutes, they can do much harm. O Lord who became the Earth, Water, Fire, Air and Space! Whenever I could, I have remembered your names. Bear me in mind always and protect me, you must.
