(418)

(418)

குறட்பிரம சாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்

எறிப்புடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல்

அரவணையின்வாய் சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே.

பதவுரை

குறள் பிரம சாரி ஆய்

–

வாமக ப்ரஹ்மசாரியாய் (எழுந்தருளி)
பக வலிமை

–

மஹாபலியினடைய
குறும்பு அதக்கி

–

செருக்கை அடக்கி
அரசு

–

(அவனுடைய) ராஜ்யமாயிருந்த பக்ஷமியை
வாங்கி

–

(தன்னுடையதாம் படி நீரேற்றுப்) பெற்று
இறைப் பொழுதில்

–

க்ஷணகாலத்துக்குள்
பாதாளம்

–

பாதாளலோகத்தை
கலவிருக்கை கொடுத்து

–

(அவனுக்கு) இருப்பிடமாகக் கற்பித்து
உதந்த

–

(இந்திரன் வேண்டுகோளைத் தலைக்கட்டினோம் என்று) மகிழ்நத
எம்மான்

–

எமது தலைவனான எம்பெருமான்    (எழுந்தருளியிருக்கிற)
கோயில்

–

கோயிலாவது
எறிப்பு உடைய

–

மிக்க ஒளியையுடைய
மணி வரை மேல்

–

நீலரத்ந பர்வதத்தின்மேல்
இள ஞாயிறு

–

காலஸூரியர்கள்
எழுந்தால் போல்

–

உதித்தாற்போல
அறவு அணை பின் வாய்

–

திருவனந்தாழ்வானிடத்து
சிறப்பு உடைய

–

அழகு பொருந்திய
பணங்கள் மிக

–

படங்களின்மேல்
செழு மணிகள்

–

செழுமை தங்கிய ரத்னங்களானவை
விட்டு எறிந்தும்

–

மிகவும் ஜ்வலியா நிற்கப்பெற்ற
திரு அரங்கம்

–

திருவரங்கமாம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மாவலினிடத்து மூன்றடி வாங்கி இரண்டிகளால் கீழ்மேலு லகங்களனைத்தையு மளந்துகொண்டு,  மூன்றாமடிக்கு இடம் கிடைக்காமல் அதனைத் தருமளவும் சிறைவைப்பாரைப்போலே அவனைப் பாதாளத்திற்கிடக்கும்படி தள்ளியவாறு கூறுவன, முன்னடிகள். “கலவிருக்கை கொடுத்து என்றது – அவ்விருப்பு சிறையிருப்பாகவன்றிகே ***-  பூமியாகக் கொடுத்த படியைப்பற்ற; கலவிருக்கையாவது- எநஞ்ச கலந்திருக்குமிருப்பிறே” என்ற வியாக்கியவாக்கியமாகி மறியத்தக்கது. பிரமசாரி – ***- . பாதாளம்- வடசொல்.

* பச்சைமாமலையோல் மேனியனான அழகியமணவாளன் சாய்ந்தருளப் பெறுகையால் அத்திருமேனியினது நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுகின்ற திருவனந்தாழ்வானுடைய படங்களின்மேல் செழுமணிகள் ஒளிவிடாநிற்பது- ஒரு நீலரத்னபர்வதத்தின்மேல் பல இளஞ்சூரியர்கள் உதித்தாற்போலு மென்பது, பின்னடி: இது இல்பொருளுவமை

English Translation

The Lord went to Mabali as a mendicant manikin, subdued his ego, took his kingdom, and in a trice gave him the nether world to rule. He resides by his own will in the temple of Tiru-Arangam. The hoods of his serpent Ananta shine with radiant gems, like several morning suns raised over a range of bright mountains.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top