(414)

(414)

கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும் பிலம்பனையும் கடிய மாவும்

உருளுடைய சகடரையும் மல்லரையும் உடையவிட்டு ஓசை கேட்டான்

இருளகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி

அருள்கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வா னமருமூர் அணிய ரங்கமே.

பதவுரை

கருள் உடை

(கிருஷ்ணனை நலிய வேணும் என்கிற) சீற்றத்தையுடையதும்
பொழில்

(மன விழுப்புண்ணும்படி புறம்பே) சோலை செய்து நிற்பதுமான
மருதும்

(இரட்டை) மருத மரங்களையும்
சதம்

மிக்க கோபத்தையுடைய
களிறும்

குலையாபீடத்தையும்
பிலம்பளையும்

ப்ரலம்பாஸுரனையும்
கடிய

மிகவும் க்ரூரான
மாவும்

குதிரை வடிவாய் வந்த நேசியையும்
உருள் உடைய

உருண்டுவந்த
சகடினையாய்

சகடாஸுரனையும்
மல்லரையும்

மல்லர்களையும்
உடையவிட்டு

நிரஹித்தருளி
ஓசை கேட்ட என்

கீர்த்திபெற்றவனும்
இருள் அகற்றும்

இருளைப் போக்காநின்ற
எறிகதிரேசன்

வீசுகின்ற கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய
மண்டலத்தூடு

மண்டலத்தினுள்ளே
அடியவரை

அடியார்களை
ஏற்றி

ஏறச்செய்து

(அங்கு நின்றும் அர்ச்சிராதி மார்க்கமாகப் பரமபதத்திற்குக் கொண்டுபோய்)

வைத்து

(அங்கு அவர்களை) நிறுத்தி
ஏணி வாங்கி

தன்னுடைய உபாயத்வரகாரத்தைத் தவிர்த்து
அருள் கொடுத்திட்டு

(அவர்கள் அவ்விடத்தில் நின்றும் மீளாமைக்கும் கைங்கரிய லாபத்திற்கு முறுப்பாக அவர்கள் பக்கல்) க்ருபைபண்ணி
ஆட் கொள்வான்

அடிமை கொள்ளுமவனுமான எம்பெருமாள்
அமரும்

பொருந்தி எழுந்தருளியிருக்கிற
ஊர்

திருப்பதியாவது
அணி அரங்கம்

அழகிய திருவரங்கமாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  யமளார்ஜுந பங்கம், குவலயாபீடவதம், ப்ரலம்பாஸுரப்ரளயம், கேசிஸம்ஹாரம், சகடாஸுரபஞ்சநம், மல்லநிரஹகம் என்னு மிவ்வாறு வ்ருத்தரந்தங்களும் முன்னடிபகளிற் கூறப்படுவன; ‘கறுப்பு’ என்னும் பொருளை தருவதாகிய ‘கருள்’ என்னுஞ்சொல் “கருப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்” என்றபடி சீற்றமென்னும் பொருளைத் தந்ததென்க. “உருளுடைய சகடரையும்” என்றம் பாடுமண்டு; “சகடினையும்” என்பதே ஆன்றோர் பாடம்; இன் – இடைச்சாரியை. அஸுரனால் ஆலோசிக்கப்பெற்ற சகடம் உருண்டு வந்து கண்ணனை நலியப் புக்கதினால் “உருளுஃடைய” என்றார். உரள் முதனிலைத் தொழிற்பெயர். இந்தத் தீப்பப்பூடுகளையும் கண்ணபிரான் ஆயாஸமின்றி எளிதிற் களைந்திட்டனனென்பது “உடையவிட்டு” என்ற சொல்நயத்தாற் போதருமென்பர்.

எம்பெருமான் தன்னை அடுத்தவர்களைப் பாரமபதத்திலேரற்றி நித்திய கைங்கைரிய பரராக்குமாறு கூறுவன, பின்னடிகள். பரமபதத்துக்குப் போவார் ஸூர்ய மண்டலத்தைக் கீண்டுகொண்டு போவதாகக் கூறப்படுவதனால் “எறிகதிரோன் மண்ணடலத்தூடு” என்றார். “தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கிண்டு புக்கு” என்று சிறிய திருமடலிலும், “மன்னுங்கடுகதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள், அன்னதோரில்லியினூடுபோய் வீடென்னுந் தொன்னெறிக்கண் சென்றாரை” என்ற பெரிய திருமடலிலும்,  “இந்தவுடல் விட்டிராவிமண்டலத்தூடேகி இவ்வண்டங் கழித்திடையிலாவரண மேழ்போய், அந்தமில்பாழ்கடந்தழகார் விரசைதனிற் குளித்தங்கமாநவனாலொளிக்கொண்ட சோதியும் பொற்றமரர், சந்தெதிர்கொண்டலங்கரித்து வாழ்த்தி வழிநடத்த வைகுந்தம்புக்க மணிபண்டபத்துச் சென்று, நந்திருமாலடியார்கள் குழங்களுடன் கூடும் நாளெனக்குக் குறுகும்வகை நல்கென்னெதிராசா” என்ற ஆர்த்திப் பிரபந்தத்திலும் (மணவாள மாமுனிகள்) அருளிச் செய்துள்ளவை காண்க. (ஏணிவாங்கி) மேல் ஏறுகைக்குச் சாதனமாயிருப்பது எதுவோ அது ஏணி எனப்படும்; அதாவது இங்கு எம்பெருமானுடைய உபாயத்வம்; பரமபதமேறுமளவுமிறே எம்பெருமானுக்கு உபாயத்வமென்கிற ஆகாரமுள்ளது; ஏறினபிறகு இவன்றனக்கு உயேத்வமென்கிற ஆகாரம் வருதால் “எணி வாங்கி” என்றாரென்க. ***- ***- ***-  என்ற விடத்து ***-  ” என்றது நோக்கத்தக்கது. பரமபதத்தில் எம்பெருமான் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியா யறுகையாலே, அங்கு அவனுக்கு உபேயத்வமே யன்றி உபாயத்வமல்லையென்க.

இப்பாட்டில் முன்னடிகளில் விரோதிநிவர்தகத்வஞ் சொல்லிப், பின்னடிகளில் மோக்ஷப்ரதத்வஞ் சொல்லப்படுமைகயால், “மோக்ஷப்ரதாநம் விரோதி நிரஸகபூர்வகம்” என்கிற அர்த்தம் அறியப்பட்டதாயிற்று.

English Translation

The Lord who destroyed the sinister Arjuna trees, the angry elephant, the Asura Pralamba, the fierce horse Kesin, the cart that ran a muck, and the mighty wrestlers, –as simply as the pots he broke to enjoy the sounds they made, — resides in Tiru-Arangam. He lifts devotees into the realms of the radiant Sun with a tall ladder-of-no-return, reveals himself and takes them into his service in Vaikunta.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top