(369)
காசின்வாய்க்கரம் விற்கிலும்கர வாதுமாற்றிலி சோறிட்டு
தேசவார்த்தைப டைக்கும்வண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்
கேசவாபுரு டோத்தமாகிளர் சோதியாய்குற ளாஎன்று
பேசுவார்அடி யார்கள்எந்தம்மை விற்கவும் பெறுவார்களே.
பதவுரை
| காசின் வாய் |
– |
ஒருகாசுக்கு |
| கரம் |
– |
ஒருபிடிநெல் |
| விற்கிலும் |
– |
விற்கும்படியான துர்ப்பிக்ஷகாலத்திலும் |
| சோறு இட்டு |
– |
(அதிதிகளுக்கு) அன்னமளித்து |
| தேச வார்த்தை |
– |
புகழ்ச்சியான வார்த்தைகளை |
| படைக்கும் |
– |
ஸம்பாதித்துக் கொள்ளுமவரும் |
| கண் மங்கையினார்கள் |
– |
உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் |
| வாழ் |
– |
வாழுமிடமான |
| திருக்கோட்டியூர் |
– |
திருக்கோட்டியூரில் (எழுந்தருளியிருக்கிற) |
| கேசவா |
– |
கேசவனே! |
| புருடோத்தமா |
– |
புருஷோத்தமனே! |
| காவாது |
– |
(தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது |
| மாறு இலி |
– |
பதில் உபகாரத்தை எதிர் பாராமல் |
| கிளர் சோதியாய் |
– |
மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே! |
| குறளா |
– |
நாமநவேஷம்பூண்ட எம்பெருமானே! |
| என்று |
– |
என்றிப்படி |
| பேசுவார் |
– |
(எம்பெருமான் திருநாமங்களைப்) போசுமவரான |
| அடியார்கள் |
– |
பாகவதர்கள் |
| எந்தம்மை |
– |
அடியோங்களை |
| விற்கவும் பெறுவார்கள் |
– |
(தம் இஷ்டப்படி) விற்றுக்கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘’***’’ இப்பாசுரமடியாகப் பிறந்தவையென்றுணர்க:- ஒருகாசுக்கு ஒருபிடிநெல் விற்கும் படியான காலத்தில் தம்வயிற்றைத் தாம் நிறைத்துக்கொள்வதே அரிது; தம்வயிற்றைப்பட்டினிகொண்டு பிறர்வயிற்றை நிறைப்பதென்றால் ஏதேனுமொரு ப்ரத்யுபகாரத்தைக் கணிசித்தாராகவேணும்; இது உலகத்தில் ஸாமந்ய ஜநங்களின் இயல்பு; திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமினோவென்றால், சாகின்வாய்க்காமலிற்குங்காலத்திலும், கைம்மாறுகருதாழ அதிதிகளுக்கு அந்ததாநம்பண்ணி நாடெங்கும் புகழ்பெற்றிருப்பார்களாம். அப்படிப் பட்ட மஹாநுபாவர் வாழுமிடத்துள்ள எம்பெருமானது திருநாமங்களை அநுஸந்திக்குமவர்கள் அடியேனைத் தங்களிஷ்டப்படி உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு யான் உடன்பட்டிருக்கத் தட்டில்லையென்று- தம்முடைய சரமபர்வ நிஷ்ட்டையின் பரமகாஷ்ட்மடையை அருளிச் செய்தவாறு.
English Translation
Even when a fistful of grain sells for a sovereign coin during famine the residents of Tirukkottiyur, well known for the generosity, feed guests without hiding their stock, chanting “Kesava”, “Purushottama”, “Radiant Lord” and “Manikin Lord” and expect nothing in return. Their servants have the right to sell us as bonded serfs.
