(319)

(319)

அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்

சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே

எல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில்

மல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்.

பதவுரை

அல்லி

–

அகவிதழ்களையுடைய
அம் பூ

–

அழகிய பூக்களால் தொடுக்கப்பட்ட

மலர்க்கோதாய் பூமாலை போன்றவளே!

அடி பணிந்தேன்

–

(உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்

–

விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்

–

(உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்

–

ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர்போன்ற கண்களையும்
மடம்

–

மடப்பத்தையுமுடைய
மானே

–

மான்போன்றவளே!
கேட்டருளாய்

–

(அதைத்) திருச்செவி சாத்தவேணும்;
அம் எல்லி போது

–

அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்

–

இனிமையான இருப்பாக
இருந்தது

–

இருந்ததான
ஒர் இடம் வகையில்

–

ஓரிடத்தில்
மல்லிகை

–

மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு

–

சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்

–

(நீர் இராமபிரானைக்) கட்டியதும்

ஓர் அடையாளம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதனால் அயோத்தியிலிருந்த காலத்தில் பிராட்டியும் பெருமாளும் ராத்ரி வேளையில் ஏகாந்தமான இடத்தில் உல்லாஸமாக இருக்கையில், பிரணய ரோஷத்தினால் பிராட்டி பெருமாளை மல்லிகைமாலையைக் கொண்டு கட்டியதை அநுமான் அடையாளமாய் கூறுகின்றான்; இது மிகவும் அந்தரங்கமாக நடந்திருக்குமாதலால், இது மற்ற அடையாளங்களைப் போலன்றிச் சிறந்த அடையாளமாகுமென்க.  வநவாஸஞ்சென்றமை இன்னுங்கூறப்படாமையால், இச்செயல் நாட்டியிலிருந்தபோது நிகழ்ந்ததாகக் கொள்வது பொருந்துமேயன்றி, வநவாஸகாலத்து நிகழ்ந்ததாகக் கொள்ளுதல் பொருந்தாதென்க. முதலடியில் பிராட்டிக்கு மலர்மாலையுவமை- உடம்பின் இளைத்தன்மையிலும், மென்மையிலும், துவட்சியிலு மென். ஸுகாநுபவத்துக்கு ஏகாந்தமானகாலமாதலால் எல்லியம்போது எனப்பட்டது. ஈற்றடியில், அங்கு- அசை.

English Translation

O Lady of full blossomed garland, Do with lotus-eyes! I fall at your feet and submit, pray hear me speak. Sweetly at dusk in a solitary place, you bound him with a string of Jasmine flowers. This here is another proof.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top