(319)
அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே
எல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில்
மல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்.
பதவுரை
| அல்லி |
– |
அகவிதழ்களையுடைய |
| அம் பூ |
– |
அழகிய பூக்களால் தொடுக்கப்பட்ட |
|
மலர்க்கோதாய் பூமாலை போன்றவளே! |
||
| அடி பணிந்தேன் |
– |
(உமது) திருவடிகளில் வணங்கிய நான் |
| விண்ணப்பம் |
– |
விஜ்ஞாபநமொன்றை |
| சொல்லு கேன் |
– |
(உம்மிடத்தில்) சொல்லுவேன்; |
| துணை மலர் கண் |
– |
ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர்போன்ற கண்களையும் |
| மடம் |
– |
மடப்பத்தையுமுடைய |
| மானே |
– |
மான்போன்றவளே! |
| கேட்டருளாய் |
– |
(அதைத்) திருச்செவி சாத்தவேணும்; |
| அம் எல்லி போது |
– |
அழகிய இராத்திரி வேளையில் |
| இனிது இருத்தல் |
– |
இனிமையான இருப்பாக |
| இருந்தது |
– |
இருந்ததான |
| ஒர் இடம் வகையில் |
– |
ஓரிடத்தில் |
| மல்லிகை |
– |
மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட |
| மா மாலை கொண்டு |
– |
சிறந்த மாலையினால் |
| ஆர்த்ததும் |
– |
(நீர் இராமபிரானைக்) கட்டியதும் |
|
ஓர் அடையாளம். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதனால் அயோத்தியிலிருந்த காலத்தில் பிராட்டியும் பெருமாளும் ராத்ரி வேளையில் ஏகாந்தமான இடத்தில் உல்லாஸமாக இருக்கையில், பிரணய ரோஷத்தினால் பிராட்டி பெருமாளை மல்லிகைமாலையைக் கொண்டு கட்டியதை அநுமான் அடையாளமாய் கூறுகின்றான்; இது மிகவும் அந்தரங்கமாக நடந்திருக்குமாதலால், இது மற்ற அடையாளங்களைப் போலன்றிச் சிறந்த அடையாளமாகுமென்க. வநவாஸஞ்சென்றமை இன்னுங்கூறப்படாமையால், இச்செயல் நாட்டியிலிருந்தபோது நிகழ்ந்ததாகக் கொள்வது பொருந்துமேயன்றி, வநவாஸகாலத்து நிகழ்ந்ததாகக் கொள்ளுதல் பொருந்தாதென்க. முதலடியில் பிராட்டிக்கு மலர்மாலையுவமை- உடம்பின் இளைத்தன்மையிலும், மென்மையிலும், துவட்சியிலு மென். ஸுகாநுபவத்துக்கு ஏகாந்தமானகாலமாதலால் எல்லியம்போது எனப்பட்டது. ஈற்றடியில், அங்கு- அசை.
English Translation
O Lady of full blossomed garland, Do with lotus-eyes! I fall at your feet and submit, pray hear me speak. Sweetly at dusk in a solitary place, you bound him with a string of Jasmine flowers. This here is another proof.
