(289)

(289)

ஏழை பேதைஓர் பாலகன் வந்துஎன் பெண்மக ளையெள்கி

தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்

ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி

மூழை யுப்பறி யாத தென்னும் மூதுரையு மிலளே.

பதவுரை

ஏழை

–

சாபல்யமுடையவளும்
பேதை

–

அறியாமையுடையவளும்
ஓர் பாலகன்

–

இளம்பருவத்தையுடையளுமான
என் பெண் மகளை

–

எனது பெண்பிள்ளையை
தோழிமார் பலர் வந்து

–

பல தோழிகள் அணுகி வந்து
என்கி

–

(விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து
கொண்டு போய்

–

அழைத்துக் கொண்டுபோய்
ஆழியான் என்னும்

–

ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான
ஆழம் மோழையில்

–

ஒருவராலும் நிலைகொள்ளவொண்ணாத கீழாற்றில்
பாய்ச்சி

–

உள்ளுறத்தள்ளி
அசப்படுத்தி

–

(அதிலே) அசப்படுத்தி
செய்த சூழ்ச்சியை

–

(இவ்வாறு) செய்த கபடத்தொழில்களை
ஆர்க்கு உரைக்கேன்

–

யாரிடம் முறையிடுவேன்?;

(இம்மகளோ வென்றால்)

மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள்

–

“அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற பழமொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள்.

English Translation

My daughter was as innocent child, attached to me. To whom do I tell what mischief her many friends played? They took her with them and dumped her into a deep whirlpool called ‘discus-wielder’. No longer is she the innocent “spoon that does not taste the salt of the soup.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top