(267)

(267)

கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்

அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டுநின் றமலை

கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்

குடவாய்ப் படநின் றும ழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

பதவுரை

கடுவாய்

பயங்கரமான வாயையும்
சினம்

மிக்க சீற்றத்தையும்
வெம் கண்

தீக்ஷ்ணமான கண்களையுமுடைய
களிற்றினுக்கு

ஒரு யானைக்கு
கவளம்

சோற்றுக் கபளத்தை
எடுத்து

திரட்டியெடுத்து
கொடுப்பான் அவன் போல்

கொடுக்கின்ற யானைப்பாகனைப் போல,
அமரர் பெருமான்

தேவர்களுக்குத் தலைவனான கண்ணபிரான்
கை

(தனது) திருக்கைகளை
அடிவாய் உற இட்டு

(மலையின்) கீழ் வேர்ப்பற்றிலே உறும்படியாகச் செலுத்தி (மற்றொரு திருக்கையினாலே மேலே பிடித்து)
எழ பறித்திட்டு

கிளரப்பிடுங்கி
கொண்டு நின்ற

(தானே) தாங்கிக்கொண்டு நின்ற
மலை

மலையாவது (எது? என்னில்;)
மேகம்

மேகங்கள்
கடல்வாய் சென்று

கடலிடத்துச் சென்று
இறங்கி கவிழ்ந்து

(அங்கு) இறங்கிக் கவிழ்ந்து கிடந்து
கதுவாய்ப்பட

(கடல்) வெறுந்தரையாம்படி
நீர்

(அங்குள்ள) நீர் முழுவதையும்
முகந்து

மொண்டு கொண்டு
ஏறி

(மீண்டும் ஆகாசத்திலே) ஏறி
எங்கும்

எல்லாவிடத்தும்
குடம் வாய்ப்பட நின்று

குடங்களில் நின்றும் நீரைச் சொரியுமா போலே
மழை பொழியும்

மழைபொழியா நிற்கப் பெற்ற

கோவர் ***  குடையே-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் மேகமழையைத் தடுப்பதற்காக மலையை உயரத் தூக்கிக்கொண்டு நின்றபடிக்கு ஓர் உவமை கூறுகின்றார் – முதலடியினால்; மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம்மலையையெடுத்துப் பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப்படுத்தியவாறு: “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்”  எனப் பிறவிடத்தும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளமை காண்க.  கடுவாய், சினம், வெங்கண் என்ற இம்மூன்றடைமொழிகளும் மேகத்துக்கும் இயையும்; கேட்டார் அஞ்சும்படியான முழக்கமும், அடர்த்துக்கொண்டு வர்ஷிக்கநிற்கிற ஆக்ரஹமும், கொள்ளிவட்டம் போன்ற மின்னற்சுழிப்பும் அமையப்பெற்றிருக்குமிறே மேகங்கள்.  கடு – ?? என்ற வடசொல்விகாரம்.  கவளம் – ???. யானையின் உணவு.  (அடிவாய் இத்யாதி) ஒருதிருக்கையை மலையின் கீழ்ச் செலுத்தி மற்றொரு திருக்கையை மலையின் மேற்செலுத்திப் பறித்தெடுத்தானென்க.  அடிவாய் – அடியிலே; வாய் – ஏழனுருபு. உற – ஊன்றும்படி.  மேகங்களானவை திருவாய்ப்பாடியெங்கும் மழையைப் பொழிந்து வருத்த, அதனைத் தொலைப்பதற்காகத் தூக்கினகுடையாமென்பது – பின்னடிகளின் கருத்து.  கதுவாய்ப்படுதலாவது – குறைவுபடுதல்; எனவே, கடன் வெறுந்தரையாம்படி என உரைக்கப்பட்டது; வேறுவகையாகவுமுரைக்கலாம்.

English Translation

The Lord of gods pushed his hands under the mount, uprooted it and stood holding it aloft like a mahout lifting up the food-pail to his angry rogue-elephant. That mount is Govardhana where dark clouds dip into the ocean and fill themselves, then pour everywhere like emptying pitchers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top