(253)

(253)

புற்றர வல்குல் அசோதைநல் லாய்ச்சி தன்புத் திரன்கோ விந்தனை

கற்றினம் மேய்த்து வரக்கண் டுகந்துஅவள் கற்பித்த மாற்ற மெல்லாம்

செற்ற மிலாதவர் வாழ்தரு தென்புது வைவிட்டு சித்தன் சொல்

கற்றிவை பாடவல் லார்கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே.

பதவுரை

புற்று

புற்றிலே (வளர்கின்ற)
அரவு

பாம்பின் படத்தை ஒத்த
அல்குல்

அல்குலை உடையளாய்
அசோதை

யசோதையென்னும் பெயரையுடையளாய்
நல்

(பிள்ளை திறத்தில்) நன்மையையுடையளான
ஆய்ச்சி

ஆய்ச்சியானவள்
தன் புத்திரன்

தன் மகனான
கோவிந்தனை

கண்ணபிரானை
கன்று இனம் மேய்த்துவர கண்டு

கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டுவரக்கண்டு
உகந்து

மனமகிழ்ந்து
அவள்

அவ்யசோதை

(அம்மகனைக் குறித்து இன்னபடிசெய் என்று)

கற்பித்த

நியமித்துக் கூறிய
மாற்றம்  எல்லாம்

வார்த்தைகளையெல்லாம்;
செற்றம் இலாதவர்

அஸூயையற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்தரு

வாழுமிடமான
தென்

அழகிய
புதுவை

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
விட்டு சித்தன்

பெரியாழ்வார்
சொல்

அருளிச்செய்த
இவை

இப்பாசுரங்களை
கற்று

(ஆசார்யமுகமாக) ஓதி
பாட வல்லார்

(வாயாரப்) பாடவல்லவர்கள்
கடல்வண்ணன்

கடல்போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய
கழல் இணை

திருவடியிணைகளை
காண்பார்கள்

கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். ‘புற்றரவல்குலசோதை’ என்று – சமுரகுணமும், ‘நல்’ என்று ஆத்மகுணமுஞ் சொல்லிற்றாகக் கொள்க.  கற்பித்த மாற்றம் – இத்திருமொழியில், மூன்றாம் பாட்டிலும் ஒன்பதாம்பாட்டிலும் நியமித்தவாறு காண்க.  வாழ்தரு = தரு – துணை வினை.

ஹஅடிவரவு :- சீலை கன்னி காடு கடி பற்றார் அஞ்சுடர் பன்றி கேட்டு திண்ணார் புற்று தழை.

English Translation

This decad of songs by Vishnuchitta of Srivilliputtur where the pure-hearted ones live, recalls the words of the slim-waisted Yasoda, the good cowherd-dame, expressing her joy on seeing her son Govinda return from the pastures with the calves. Those who can sing it will see the lotus feet of the ocean-hued Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top