(246)
காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோ டல்பூச்
சூடிவ ருகின்ற தாமோ தராகற்றுத் தூளிகாண் உன்னு டம்பு
பேடை மயிற்சாயல் பின்னை மணாளா நீராட் டமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்.
பதவுரை
| காடுகள் ஊடு போய் |
– |
(பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து |
| (கன்றுகள் கைகழியப் போகாதபடி) |
– |
|
| மறி ஓடி |
– |
(அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி |
| கன்றுகள் மேய்த்து |
– |
(அக்) கன்றுகளை மேய்த்து |
| சார் கோடல் பூ சூடி |
– |
பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்துகொண்டு |
| வருகின்ற |
– |
(மீண்டு) வருகின்ற |
| தாமோதர் |
– |
கண்ணபிரானே! |
| உன் உடம்பு |
– |
உன் உடம்பானது |
| கன்று தூளி காண் |
– |
கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப்பெற்றுள்ளதுகாண்; |
| மயில் பேடை |
– |
பெண்மயில் போன்ற |
| சாயல் |
– |
சாயலையுடைய |
| பின்னை |
– |
நப்பின்னைப்பிராட்டிக்கு |
| மாணாளா |
– |
வல்லபனானவனே! |
|
(இந்த உடம்பை அலம்புவதற்காக) |
||
| நீராட்டு அமைத்து வைத்தேன் |
– |
நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்; |
|
(ஆகையால் நீ) |
||
| ஆடி |
– |
நீராடி |
| அமுதுசெய் |
– |
அமுதுசெய்வாயாக; |
| உன்னோடு உடனே |
– |
உன்னோடு கூடவே |
| உண்பான் |
– |
உண்ணவேணுமென்று |
| அப்பனும் |
– |
(உன்) தகப்பனாரும் |
| உண்டிலன் |
– |
(இதுவரை) உண்ணவில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரானே! நீ கன்று மேய்க்கக் காட்டிடைப் புகுந்து மேய்க்கும்போது அவை அங்குமிங்கும் சிதறி ஓட, அப்படி அவ்ற்றை ஓட விடாமல் அவற்றின் முன்னே ஓடித் திருப்பி இவ்வாறு கஷ்டங்கள் பட்டுக் கன்றுகளை மேய்த்துவிட்டு வரும்போது உன் உடம்பெல்லாம் புழுதி படிந்து கிடக்கின்றது; இந்த மாசு தீரும்படி உன்னை நீராட்டுவதற்காக எண்ணெய் புளிப்பழம் முதலிய ஸாமக்ரிகளச் சேமித்துவைத்திருக்கின்றேன்; நீ வந்த பிறகு உன்னுடனே உண்ணவேணுமென்று உன் தகப்பனாரும் இதுவரை உண்ணாமல் காத்திருக்கின்றார்; ஆகையால் சடக்கென நீராடி அமுது செய்யவா என்றழைக்கின்றாள். கோடல் பூ-காந்தள் பூ; கார்-பெருமைக்கும் பேர்.
English Translation
O Damodara! Entering the deep forest, driving the calves and running before them, you return wearing dark glory-lily flowers. See, your body is covered with the dust raised by the calves. O Bridegroom of Nappinnai who charms you like a peacock female! I have made ready for your bath, Bathe and come for supper. Your father has not eaten, he wants to eat with you.
