(242)

(242)

குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான்

உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுடை

கடியவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்

கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

என் பிள்ளையை

என் மகனான
தாமோதரனை

கண்ணபிரானை,
குடையும்

குடையையும்
செருப்பும்

செருப்பையும்
கொடாதே

(அவனுக்குக்) கொடாமல்
கொடியேன் நான் –

கொடியவளாகிய நான்
உடையும்

(ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய்
கடியன

கூரியனவாய்க் கொண்டு
ஊன்று

(காலிலே) உறுத்துவனவாய்
வெம்

(இப்படி) அதிதீக்ஷ்ணமான
பரற்கள் உடை

பருக்காங்கல்லையுடைய
கடிய வெம்

அத்யுஷ்ணமான
கான் இடை

காட்டிலே

கால் அடி நோவ கன்றின்பின்  போக்கினேன்

எல்லே பாவமே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாட்டிலுள்ள பருக்காங்கற்கள் கதிரவனுடைய எரிச்சலினால் ஒன்று பலவாகப் பிளந்து கூர்மைமிக்கு உள்ளங்காயிலில் உறுத்தி வருத்துமே, வெயிலுக்குத் தடையாகக் குடையையும், தரையின் வெம்மைக்குத் தடையாகச் செருப்பையும் அவனுக்குத் தாராமல் இப்படிபட்ட காட்டிற் போகவிட்டேன், என் கொடுமை யிருந்தவாறு என்னே! என்கிறாள். மேல்திருமொழியில் “குடையுஞ் செருப்புங் குழலுந் தருவிக்கக் கொள்ளாதே போனாய்மாலே”” எனக்காண்கையால் இங்குக் ‘கொடாதே’’ என்பதற்கு அவன் இவற்றை ‘வேண்டா’ வென்று மறுக்கச் செய்தேயும் நான் கட்டாயப்படுத்தி [பலாத்காரமாக] அவற்றைக் கொடாமல் என்று பொருள் விரித்தல் வேண்டுமென்க. பரல்-பருக்கை. கால் அடி-காலின் உள்ளடி.

English Translation

Without even giving him an umbrella and sandals to wear. I sent my Damodara into the blazing hot forest where sharp broken rocks would pierce and hurt his feet. O Heartless me! O, why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top