(219)

(219)

மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று

மூவடி தாவென்று இரந்தஇம் மண்ணினை

ஓரடி யிட்டுஇரண் டாமடி தன்னிலே

தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்.

பதவுரை

மா வலி

மஹாபலியினுடைய
வேள்வியில்

யாகபூமியிலே
மாண் உரு ஆய் சென்று

பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி
மூ அடி தா என்று

(என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று
இரந்த

யாசித்துப்பெற்ற
இ மண்ணினை

இந்தப்பூமியை

(அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே)

ஓர் அடி இட்டு

(பூமிப்பாப்படங்கலும் தனக்குள்ளேயாம்படி) ஓரடியைப் பரப்பவைத்து (அளந்து)
இரண்டாம் அடி தன்னிலே

இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத்தொடங்கின வளவிலே
தாலி அடி இட்டானால்

மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளேயாம்படி) தாவி அடியிட்ட கண்ணபிரானால்

இன்று முற்றும்

(தேவெந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி)

தரணி அளந்தானால்

லோகத்தை அளந்தவனாலே

இன்று முற்றும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் தன்னை அழியுமாறும் அடியார்களின் வேண்டுகோளைத் தலைக்கட்டித் தருமவனாயிருந்து வைத்து எங்கள் பக்கலிலே தீமை செய்ய ஒருப்பட்டது என்னோ! என்று முறைப்படுகின்றனர். தந்திருவடிகளின் மென்மையை நோக்காமல் காடுமேடுகளை அளந்தருளினவன் அத்திருவடிகளின் ஆயாஸந்தீர நாங்கள் அவற்றைப் பிடிக்கின்றோமென்றால் அதற்கிசைந்து திருவடிகளைத் தந்தருளலாகாதோ! என்ற மனக்குறையை நுண்ணிதினுணர்க. தாவடி இட்டானால்- தாவி அடியிட்டானால்; தொகுத்தல் விகாரம். தாவு அட்ட – தாவுகின்ற அடி என்று உரைப்பாருமுளர். தரணி-பூமியைச் சொல்லக்கடவ இச்சொல்- இன்குப் பொதுப்படையாக உலகங்களைக்குறிக்கும். இலக்கணையால்.

English Translation

He went to Mabali’s sacrifice in the guise of a manikin and asked for three strides of land. He received the gift. With one stride, then the other, he straddled the Universe, Today we are finished,–by the Lord who measured the Earth,–O, We are finished.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top