(215)
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.
பதவுரை
| தடம்படு |
– |
இடமுடைத்தான [விசாலமான] |
| தாமரைப்பொய்கை |
– |
தாமரைப்பொய்கையை |
| கலக்கி |
– |
உள்ளே குதித்து கலங்கச்செய்வது (அக்கலக்கத்தினால் சீற்றமுற்று) |
| விடம்படு |
– |
விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின |
| நாகத்தை |
– |
காளிய ஸர்ப்பத்தை |
| வால்பற்றி ஈர்த்து |
– |
வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு) |
| படம்படு |
– |
படமெடுக்கப்பெற்று |
| பை |
– |
மெத்தென்றிருந்த |
| தலைமேல் |
– |
(அந்நாகத்தின்) தலைமேல் |
| ஏழப்பாய்ந்திட்டு |
– |
கிளாக்குதித்து (அத்தலையின் மீது நின்று) |
| உடம்பை |
– |
(தன்) திருமேனியை |
| அசைத்ததனால் |
– |
அசைத்து கூத்தாடின கண்ணபிரானால் |
|
இன்று முற்றும்; |
||
|
(அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்) |
||
| உச்சியில் |
– |
(அவனுடைய) படத்தின் மீது |
| நின்றானாள் |
– |
நின்றருளின கண்ணபிரானால் |
|
இன்று முற்றும் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இடையர்களுக்கு பசுக்களும் விடாய்தீர நீரைப் பருக வொண்ணாதபடி தாமரை பொய்கையில் நெடுநாளாய் கிடந்த காளிய நாகத்தின் கொழுப்படங்கினபடியை அநுஸந்தித்த ஆய்ச்சிகள் மகிழ வேண்டியிருக்க அது செய்யாமல் ‘இன்று முற்றும்’ என்பனென் னென்னில்; இப்படி எங்கள் பக்கல் மாத்திரம் தீம்பு செய்யத்தலைப்பட்டானே இது எங்கள் பாவமோ? இக்கஷ்டங்களை யாம் பொருத்து உயிர்தறிப்பது மிகவும் அரிது என்று வயிறெரிந்து கூறுகின்றனரெனக் கொள்க. விடம்-விஷம். ‘பைம்பொன்’ என்ற சொல் பசுமை+பொன் என பிரித்தாற்போல, பைந்தலை என்கிற இச்சொல்லும், பசுமை+தலை எனப் பிரிகின்றதென்று நினைக்கவேண்டா; பை-என்பது மெத்தெனவு, அழகு; பாம்பின் தடம் /முதலிய பல பொருட்களை குறிப்பதொரு தனி சொல் என்க. ‘இவன் இப்பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொள்ளப் போகிறானித்தனை’ என்று நடுநடுங்கி அஞ்சி கிடந்த அனுகூலர் மனமகிழ உடம்பசைந்து கூத்தாடினபடி.
English Translation
Entering a lotus lake, and grasping a venomous serpent by its tail, he jumped on to its wide hood raised high, he shook his body and danced , today we are finished,–nad stood on its head,– O, We are finished.
