(215)

(215)

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி

விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து

படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு

உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.

பதவுரை

தடம்படு

இடமுடைத்தான [விசாலமான]
தாமரைப்பொய்கை

தாமரைப்பொய்கையை
கலக்கி

உள்ளே குதித்து கலங்கச்செய்வது (அக்கலக்கத்தினால் சீற்றமுற்று)
விடம்படு

விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின
நாகத்தை

காளிய ஸர்ப்பத்தை
வால்பற்றி ஈர்த்து

வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு)
படம்படு

படமெடுக்கப்பெற்று
பை

மெத்தென்றிருந்த
தலைமேல்

(அந்நாகத்தின்) தலைமேல்
ஏழப்பாய்ந்திட்டு

கிளாக்குதித்து (அத்தலையின் மீது நின்று)
உடம்பை

(தன்) திருமேனியை
அசைத்ததனால்

அசைத்து கூத்தாடின கண்ணபிரானால்

இன்று முற்றும்;

(அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்)

உச்சியில்

(அவனுடைய) படத்தின் மீது
நின்றானாள்

நின்றருளின  கண்ணபிரானால்

இன்று முற்றும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இடையர்களுக்கு பசுக்களும் விடாய்தீர நீரைப் பருக வொண்ணாதபடி தாமரை பொய்கையில் நெடுநாளாய் கிடந்த காளிய நாகத்தின் கொழுப்படங்கினபடியை அநுஸந்தித்த ஆய்ச்சிகள் மகிழ வேண்டியிருக்க அது செய்யாமல் ‘இன்று முற்றும்’ என்பனென் னென்னில்; இப்படி எங்கள் பக்கல் மாத்திரம் தீம்பு செய்யத்தலைப்பட்டானே இது எங்கள் பாவமோ? இக்கஷ்டங்களை யாம் பொருத்து உயிர்தறிப்பது மிகவும் அரிது என்று வயிறெரிந்து கூறுகின்றனரெனக் கொள்க. விடம்-விஷம். ‘பைம்பொன்’ என்ற சொல் பசுமை+பொன் என பிரித்தாற்போல, பைந்தலை என்கிற இச்சொல்லும், பசுமை+தலை எனப் பிரிகின்றதென்று நினைக்கவேண்டா; பை-என்பது மெத்தெனவு, அழகு; பாம்பின் தடம் /முதலிய பல பொருட்களை குறிப்பதொரு தனி சொல் என்க. ‘இவன் இப்பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொள்ளப் போகிறானித்தனை’ என்று நடுநடுங்கி அஞ்சி கிடந்த அனுகூலர் மனமகிழ உடம்பசைந்து கூத்தாடினபடி.

English Translation

Entering a lotus lake, and grasping a venomous serpent by its tail, he jumped on to its wide hood raised high, he shook his body and danced , today we are finished,–nad stood on its head,– O, We are finished.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top