(190)

(190)

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கி ருந்தாய்

தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூமல ராள்மண வாளா

உண்டிட்டு உலகினை யேழும் ஓரா லிலையில் துயில்கொண்டாய்

கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

அத்தாணியுள்

–

அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள்

–

தேவர்கள்
சூழ

–

சூழ்ந்திருக்க
அங்கு

–

அவர்கள் நடுவில்
அண்டத்து

–

பரமபதத்தில்
இருத்தாய்

–

வீற்றிருப்பவனே!
தொண்டர்கள்

–

அடியார்களுடைய
நெஞ்சில்

–

ஹ்ருதயத்தில்
உறைவாய்

–

வஸிப்பவனே!
து மலரான்

–

பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா

–

கொழுநனே!

(பிரளய காலத்தில்)

உலகினை ஏழும்

–

ஏழு உலகங்களையும்
உண்டிட்டு

–

உண்டுவிட்டு
ஓர் ஆல் இலையில்

–

ஒராவிலையில்
துயில் கொண்டாய்

–

யோக நித்திரையைக் கொண்டவனே!
நான்

–

நான்
உன்னை கண்டு

–

(நீ பூச்குடியதைப்) பார்த்து
உகக்க

–

மகிழும்படி
கருமுகைப்பூ

–

இருவாட்சிப் பூவை சூட்டவாராய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருப்பவனே! அவ்விருப்பைக் காட்டிலும் மிகவிரும்பி அன்பர்களின் நெஞ்சிலே யெழுந்தருளியிருப்பவனே! லக்ஷ்மீநாதனே! உலகங்களைப் பிரளயங் கொள்ளாதபடி வயிற்றிலே கொண்டு காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூடவரவேணு மென்கிறாள்.

English Translation

O Lord seated in Vaikuntha surrounded by resident eternals, Lord living in the hearts of devotees1 o Bridegroom of the pure lotus-dame Lakshmi, you swallowed the seven worlds and slept as a child on a floating fig leaf! Come and wear these Karumukai flowers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top