(188)

(188)

குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே

மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய்

குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

குடங்கள்

பல குடங்களை
எடுத்து

தூக்கி
ஏறவிட்டு

உயர்வெறிந்து

(இப்படி)

கூத்து ஆட

குடக்கூத்தை யாடுவதற்கு
வல்ல

ஸாமர்த்தியமுடைய
எம் கோவே

எம்முடைய தலைவனே
மடம் கொள்

மடப்பமென்ற குணத்தையுடைய
மதி முகத்தாரை

சந்த்ரன் போன்ற முகத்தையுடைய பெண்களை
மால் செய்ய வல்ல

மயக்கவல்ல
என் மைந்தா

எனது புத்திரனே!
முன்

நரஸிம்ஹாவதாரத்திலே
இரணியன்  நெஞ்சை

ஹிரண்யாஸுரனுடைய மார்பை
இடந்திட்டு

(திருவுகிர்கரள்) ஊன்ற வைத்து
இரு பிளவு ஆக

இரண்டு பிளவாகப் போம்படி
தீண்டாய்

பிளந்தவனே!
குடந்தை

திருக்குடந்தையில்
கிடந்த

பள்ளிகொள்ளுகிற
எம்கோவே

எமது தலைவனே!

குருக்கத்திப்பூ சூட்டவாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நரஸிம்ஹாவதாரம் முதலிய மற்றுமுள்ள விபவாவதாரங்கள் செய்தவனும் திருக்குடந்தை முதலிய திவ்ய தேசங்களில் வாழ்பவனும் இக்கண்ணபிரானே யென்பது இதில் விளங்கும்.  குடக்கூத்து – ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாக அவர்களாடுவதொரு கூத்து; இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க இருதோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலுங் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து என்பர்; இதனைப் பதினோராடலிலொன்றெனறும் அறுவகைக் கூத்திலொன்றென்றுங் கூறி “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குப வைந்துறுப்பாய்ந்து”  என்றுமேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார்.

English Translation

My king, deft in juggling with pots thrown in the air! My Prince, infatuating the coy moon-faced girls! Long ago you ripped Hiranya’s chest into two. My Lord reclining in Kudandai, come wear these Kurukatti flowers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top