(167)
கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை
அழிப்பான் நனைந்திட்டுஅவ் வாழி யதனால்
விழிக்கு மளவிலே வேரறுத் தானை
குழற்குஅணி யாகக்குழல் வாராய்அக் காக்காய் கோவிந்தன் தன்குழல் வாராய்அக் காக்காய்.
பதவுரை
|
அக்காக்காய்!- |
||
| கேடு இலாதார் |
– |
(வரபலமும் புஜபலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லையென்று நி னைத்திருந்தவரான |
| கிழக்கில் குடி மன்னரை |
– |
கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற்குடியிருந்த ராஜாக்களை |
| அழிப்பான் |
– |
அழிக்கும்படி |
| நினைந்திட்டு |
– |
எண்ணி |
| அ ஆழி அதனால் |
– |
அந்தச் சக்ராயுதத்தால் |
| விழிக்கும் அளவிலே |
– |
கண்மூடித் திறக்கின்ற காலத்திற்குள் |
| வேர் அறுத்தானை |
– |
ஸமூலமாக அழித்தவனுடைய |
| குழற்கு |
– |
கூந்தலுக்கு |
| அணி ஆக |
– |
அழகு உண்டாம்படி குழல்வாராய் |
| கோவிந்தன் |
– |
(இந்த) கோவிந்தனுடைய |
| தண்குழல் |
– |
குளிர்ந்த (சிறந்த) குழலை |
| வாராய் |
– |
வாருவாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கிழக்கிற் குடி மன்னர் – ப்ராக்ஜ்யோதிஷபுரவாஸிகளான நிரகாஸுரன் முதலானார். அவ்வாழி – அ – உலகறிசுட்டு. ப்ரஸித்தியைக் காட்டும். இனி, கேடு இலாதாரை – (விஷ்ணுபக்தராதலால்) அழிவில்லாதவரான இந்த்ராதிகளை, அழிப்பான் நினைந்திட்ட கிழக்கிற் குடிமன்னர் விழிக்குமளவிலே (அவரை) வேரறுத்தான் என்றும் உரைப்பர். அழிப்பான் – எதிர்காலவினையெச்சம்.
English Translation
Within the twinkle of any eye this Govinda wielded his discus and destroyed Narakasura by the root, and the other kings of the root, and the other kings of the Eastern kingdoms who meant harm to the innocent Indra and other gods. O Raven, comb his hair, come and comb his hair to bring out its beauty.
