(166)

(166)

கற்றினம் மேய்த்துக் கனிக்குஒரு கன்றினை

பற்றி யெறிந்த பரமன் திருமுடி

உற்றனபேசிநீ ஓடித் திரியாதே

அற்றைக்கும் வந்துகுழல் வாராய்அக் காக்காய் ஆழியான் தன்குழல் வாராய்அக் காக்காய்.

பதவுரை

அக்காக்காய்!-

நீ

–

நீ
உற்றன

–

(உன் ஜாதிக்குத்) தகுந்தவற்றை
பேசி

–

சொல்லிக்கொண்டு
ஓடி

–

அங்குமிங்கும் பறந்து
திரியாதே

–

திரியாமல்,-
கன்று இனம் மேய்த்து

–

கன்றுகளின் கூட்டத்தை மேய்த்துவந்து
ஒரு கன்றினை

–

(அஸுராவிஷ்டமான) கன்றொன்றை
பற்றி

–

பிடித்து
கனிக்கு

–

(அஸுராவிஷ்டமான) விளாம்பழத்தை உதிர்த்ததற்காக
எறிந்த

–

(குணிலாக) வீசின
பரமன்

–

பரமபுருஷனுடைய
திருமுடி

–

அழகிய தலைமுடியை
அற்றைக்கும் வந்து

–

அவ்வக்காளும் வந்து
குழல்வாராய்

–

வாருவாயாக
ஆழியான் தன்

–

சக்ராயுதபாணியான இவனுடைய

குழல் வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

முள்ளை முள்ளாற் களைவதுபோல அஸுரனை அஸுரனைக் கொண்டெ களைந்தனன் என்க. கன்று + இனம் = கன்றினம்.  அற்றைக்கும் – ‘அன்று’ என்னும் மென்றொடர்க் குற்றியலுகரம், வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்று ‘அற்றை’ என்றாகும்.  அதன்மேல், கு – சாரியை. ஆழியான் – “ஆழி கொண்டுன்னை யெறியும்”  என்றவிடத்துக் கருத்தை நினைக்க.

English Translation

When grazing the calves he picked up a calf by its feet, swirled it and let it go, hitting a wood-apple tree. O Raven, now do not go around chattering come here and comb the coiffure of the Lord who wields the discus. Comb his hair, come and comb his hair everyday.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top