(162)
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல்தனி வித்தினை
என்னையும் எங்கள் குடிமுழுது ஆட்கொண்ட
மன்னனை வந்துகுழல் வாராய்அக் காக்காய் மாதவன் தன்குழல் வாராய்அக் காக்காய்
பதவுரை
| அக்காக்காய் |
– |
காக்கையே! |
| பின்னை |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு |
| மணாளனை |
– |
நாயகனும் |
| பேரில் |
– |
திருப்பேர்களிலே |
| கிடந்தானை |
– |
பள்ளிகொண்டிருப்பவனும் |
| முன்னை |
– |
(பகவதநுபவத்தில்) முதல்வரான |
| அமரர் |
– |
நித்யஸுரிகளுக்கு |
| முதல் |
– |
தலைவனும் |
| (அந்த நித்யஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்) | ||
| தனிவித்தினை |
– |
ஒப்பற்ற காரணமாயிருப்பவனும் |
| என்னையும் |
– |
என்னையும் |
| எங்கள் குடி முழுது |
– |
எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும் |
| ஆட்கொண்ட |
– |
அடிமை கொண்ட |
| மன்னனை |
– |
தலைவனுமாகிய கண்ணனுக்கு |
| வந்து |
– |
(நீ) வந்து |
| குழல் வாராய் |
– |
கூந்தல் வாருவாயாக |
| அக்காக்காய் |
– |
காக்கையே! |
| மாதவன் தன் |
– |
க்ரியபதியான இவனுக்கு |
|
குழல் வாராய்- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- காக்கை வந்து கத்தும்போது குழந்தைகள் பராக்காயிருக்குமாதலால், அப்போது தலைவாருதல் ஸுகமாய் முடியுமென்பது பற்றி, அக்காரியத்தைக் காக்கையின் மேலேற்றிக் ‘குழல்வாராய் அக்காக்காய்’ என்றாள் என்க. ‘அக்காக்காய்!’ என்று காக்கையை விளித்துக் குழந்தைகளுக்குக் குழல்வாரி முடித்தால், உலக வழக்கத்திலிருப்பது காண்க. ‘முதல்’ என்றதனோடும் இரண்டனுருபு கூட்டுக. வித்து – ஸீஜம். எனவே, ஆதிகாரணம். பேர் – திருப்பேர்நிகர், சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று.
English Translation
This is the bridegroom of Nappinnai, this is the Lord reclining in Tirupper. He is the first cause of the ancient celestials, he is the king come to rule me and all my clan. He is the Lord Madhava. O Raven, comb his hair, come and comb his hair.
