(160)

(160)

பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்

நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்

மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.

பதவுரை

பூணி

பசுக்கள் கட்டிய
தொழுவினில்

கொட்டகையிலே
புக்கு

நுழைந்து
புழுதி அளைந்த

புழுதி மண்ணிலளைந்(து அதனால் மாசுபடிந்)த
பொன்மேனி

(உனது) அழகிய உடம்பை
காண

பார்ப்பதற்கு
பெரிதும்

மிகவும்
உகப்பன்

(நான்) விரும்புவேன்
ஆகிலும்

ஆனாலும்
கண்டார்

(உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர்

‘(இவள் பிள்ளைவளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்

(அன்றியும்)

எத்தனையும் நாண் இலாதாய்

சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நிப்பின்னை

நிப்பின்னையானவள்
காணில்

நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும்

சிரிப்பாள்

என் மாணிக்கமே! (என்) மணியே!

மஞ்சனம் ஆட நீ வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற் புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப் புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும் ‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே, தவிரவும், நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது இருப்பதுபோல நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். …

English Translation

Seeing your dirty face covered with a golden-hued dust of the cowpen is always enjoyable to me. But others will speak ill. O Utterly shameless Gem, Nappinnai with laugh if she sees you. O Gem-hued Lord, come have you bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top