(154)

(154)

பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நல்லாதுஎன் னெஞ்சம்

ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்

காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்

வாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.

பதவுரை

பேய்ச்சி

பூதனையினுடைய
முலை

முலையை

(அவளுடைய உயிரோடும்)

உண்ண

(நீ) உண்டுவிட
கண்டு

(அதைப்)  பார்த்தும்
(நான் அஞ்சி ஓட வேண்டியிருக்க, அங்ஙனம் செய்யாமல்)
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது

பின்பும் என் மனங்கேளாமல்
ஆய்ச்சியர் எல்லாரும்

இடைச்சிகள் எல்லாரும்
கூடி

ஒன்று கூடி
அழைக்கவும்

கூப்பாடு போட்டுக் கதறவும்
நான்

(உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலைதந்தேன்

முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு

நெல்லியையிட்டு
காய்ச்சின

காய்ச்சின
நீர்

வெந்நீரை
கடாரத்தில்

சருவத்தில்
பூரித்து வைத்தேன்

நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த

பொருந்திய
புகழ்

யசஸ்ஸையும்
மணி

நீலமணி போன்ற
வண்ணா

நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம்ஆட

நீராட

நீ வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘உனக்கு முலைகொடுத்த பேய்ச்சி பட்டபாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபடவேண்டி வரப்போகிறதே என்று அஞ்சி ஓடவேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல் உனக்கு நான் முலைதந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள். நெல்லி – நெல்லியிலை.  காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது.  கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித்தாது வடியாப் பிறந்த வினையெச்சம்.

English Translation

Even after seeing you suck the life out of Putana’s breast, my heart would not listen; I gave your suck, when all the milkmaids try to dissuade me. I have filled the bathtub with hot water, purified with gooseberry wood. O Gem-hued Lord of eternal fame, come for your bath!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top