(151)

(151)

வார்காது தாழப்பெருக் கியமைத்து மகரக் குழையிட வேண்டி

சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் சிந்தையுள் நின்று திகழ

பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன

ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார் அச்சுத னுக்குஅடி யாரே.

பதவுரை

அசோதை

யசேதையானவள்
வார்

(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது

காதுகளை
தாழ

தொங்கும்படி
பெருக்கி

வளர்த்து
அமைத்து

ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி

மகர குண்டங்களை இடவிரும்பி
திருமாலை

ச்ரிய பதியான கண்ணனை
சீரால் சொன்ன

சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்

சொற்கள்
சிந்தையுள்

(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று

நிலையாகப் பொருந்தி
திகழ

விளங்க,

(அச்சொற்களை),

பார் ஆர் தெர்ல்புகழான்

பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும்
புதுவை

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்

நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன

த்வாதசநாமங்களோடுஞ் சேர்த்துச்சொல்லி யழைத்த
ஆராத

(ஓத ஓத) த்ருப்திபிறவாத
அந்தாதி

அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்

பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்

ஓதவல்லவர்கள்
அச்சுதனுக்கு

எம்பெருமானுக்கு
அடியார்

அடிமை செய்யப் பெறுவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி, அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது.

சொற்றொடர் நிலைச்செய்யுள் பொருட்தொடர்நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை.  “செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும்.  அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம்,  (நிவ வயகி, நிவ வதெவெத வ த) திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று,

அடிவரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த,

English Translation

These twelve ‘Namas songs’ in Andadi  style by world famous Puduvai king Vishnuchitta recalls the words lovingly spoken by Yasoda to the Lord Tirumal desirous of strectching his long ears with Makara ear-pendants. Those who master it will be devotees of Achyuta.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top