(152)

(152)

வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு

திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்

எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன்

நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்

பதவுரை

வெண்ணெய்  அளைந்த

வெண்ணெயளைந்ததனாலான
குணுங்கும்

மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும்

விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு

(உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்)
இஇரா

இன்றை இரவில்
தேய்த்து கிடக்க

(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை

உன்னை
திண்ணென

நிச்சயமாக
நான ஒட்டேன்

நான் ஸம்மதிக்க மாட்டேன்,
எண்ணெய்

(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும
புளி பழம்

புளிப்பழத்தையும்
கொண்டு

ஸித்தமாக வைத்துக்கொண்டு
இங்கு

இங்கே
எத்தனை போதும்

எவ்வளவுகாலமாக (வெகுகாலமாக)
இருந்தேன்

(உன் வரவை எதிர்பார்த்து) இராகின்றேன்,
கண்ணல் அரிய பிரானே

(ஒருவராலும ஸ்வயத்நித்தால்) கிட்டக்கூடாத ஸ்வாமியே’
நாரணா

நாராயணனே’
நீராட

நீராடுவதற்கு
வாராய்

வரவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்..  அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும,  இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்;  அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க,  விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க.  புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.

English Translation

You have putrid butter and the dirt of the playfield all over you; tonight I will definitely not let you go to sleep scrabbling yourself. How long have I waited for you with oil and soap nut powder! O Narayana, hard-to-get Lord, come for your bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top