(97)
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோவச்சோ
பதவுரை
| பொன் இயல் |
– |
பொன்னாற்செய்த |
| கிண்கிணி |
– |
அரைச்சதங்கை பாதச் சதங்கைகளையும் |
| சுட்டி |
– |
சுட்டியையும் |
| புறம் |
– |
(அதற்கு உரிய) இடங்களிலே |
| கட்டி |
– |
அணிந்து |
| தன் |
– |
சதங்கைக்கு |
| இயல் |
– |
பொருந்திய |
| இசை |
– |
சப்தமானது |
| சலன்சலன் என்றிட |
– |
சலன்சலனென்று ஒலிக்க |
| மின் இயல் |
– |
மின்னலோடு பொருந்திய |
| மேகம் |
– |
மேகமானது |
| விரைந்து |
– |
வேகமாக ஓடிவந்து |
| எதிர்வந்தால் போல் |
– |
எதிரே வந்தாற் போலே |
| என் இடைக்கு ஒட்டரா |
– |
என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து |
| அச்சோ அச்சோ |
– |
(என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும் |
| எம்பெருமான் |
– |
எங்களுடைய தலைவனே! |
| வாரா |
– |
வந்து |
|
அச்சோ அச்சோ |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – மிகவும் ஒளிவீசுகின்ற ஆபரணங்களை அணிந்து கொண்டுள்ள கண்ணன் ஓடிவருவது – மின்னலைக் கொண்டுள்ள மேகம் விரைந்து ஓடிவருவதை ஒக்கும். உபமேயத்தில் சலன்சலனென்றிட என்றதனால் உபமானத்தில் சிறிய இடிகளிடித்தலைக் கொள்க. குழந்தைகள் தாய்மாரிடுப்பில் ஏறுவதற்காக ஓடிவந்து அத்தாய்மார்களைத் தழுவி அணைத்துக் கொள்ளும் இயல்பைப் பிரார்த்திக்கிறபடி. அச்சோ என்பது முற்காலத்திலே குழந்தையை அணைத்துக்கொள் என்று வேண்டுதற்கு ஏற்ற குறிப்புச்சொல்லாக விருந்ததெனக் கொள்ளத்தகும். இனி அச்சோ என்பது அதிசயத்தைக் குறிப்பதோரிடைச் சொல்லெனக்கொண்டு கண்ணன் தன்னை அணைத்துக் கொள்ளுதலை நன்கும்போது தோன்றும் பரமாநந்தத்தில் மூழ்கி நெஞ்சுருகிச் சொல்லிடிந்து வாய்விட்டுச் சொல்லமாட்டாமல் அவ்வாச்சர்யத்தை ஒரு தரத்துக்கிருதரம் அச்சோ அச்சோ என்கிறாள் என்னவுமாம். எனவே இது இங்கு அணைத்துக்கொள் என்ற பொருளை ஸந்தர்ப்பத்தால் குறிப்பிக்கின்றதென்று ஒட்டம் + தார = ஒட்டார விகாரப்புணர்ச்சி. ஒட்டரா வாரா – செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்.
English Translation
With golden ankle bells and a forehead pendant in their places sounding ‘clang clang’ , is he going to come running to my waist confronting me like a swift lightning cloud? My Lord, come quickly, Acho, Acho!
