(93)

(93)

பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய

அக்கு வடமிழிந் தேறித் தாழ அணியல்குல் புடைபெயர

மக்க ளுலகினில் பெய்தறி யாத மணிக்குழ வியுருவின்

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.

பதவுரை

கரு

கருநிறமான
சிறு

சிறிய
பாறை

மலையினுடைய
பக்கம் மீது

பக்கத்திலே

(மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)

அருவிகள்

நீரருவிகள்
பகர்ந்து அனைய

ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற

(திருவரையிற்சாத்திய)

அக்குவடம்

சங்குமணி வடமானது
ஏறி இழிந்து தாழ

உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி

அழகிய
அல்குல்

நிதம்பம்
புடை

பக்கங்களிலே
பெயர

அசையவும்
உலகினில்

உலகத்திலுள்ள
மக்கள்

மனிதர்
பெய்து அறியா

பெற்றறியாத
மணி குழலி உருவி்ன்

அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்

(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க. )

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கருநிறத்தையுடைய திருவரையிற் சாத்திய வெண்ணிறமான சங்குமணி வடமானது, தளர்நடை நடக்கும்போது முன்பின்னாக மாறிமாறி ப்ரகாசிப்பதானது – கரிய சிறுமலையின் பக்கத்திலே வெள்ளருவி மேடும்பள்ளமுமான இடங்களில் ப்ரகாசிப்பதை ஒத்திருக்கும்படி.  அல்குல் – தொடையிடுக்குக்கும் அரைக்கும் இடையிலுள்ள இடம்.  பாறை – இலக்கணையால் மலையை உணர்த்திற்று.  பகர்ந்தனைய – ‘பகர்ந்ததனைய‘ என்பதன் விகாரம்.  அன்றி வினையெச்சத் திரிபாகக் கொண்டு – பகர்ந்தால் (அதை) அனைய என்று கொள்ளினுமாம்.  பக்கம் – ‘பஷம்‘ என்ற வடசொல் திரிபு.  குழ – இளமை: உரிச்சொல்; அதனை உடையது குழவியெனக் காரணக் குறி; இ-பெயர் விகுதி.  (அ)

English Translation

Like a stream that winds its way down a dark mountain appears like a fluttering ribbon of light, the silver waistband of my dark gem-hued Lord Vasudeva goes up down as he moves his hips.  Gem of a child such as the world has never seen, is he going to come toddling now?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top