(61)
சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்
நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
பதவுரை
| நிறை மதி |
– |
பூர்ண சந்திரனே! |
| என் இள சிங்கத்தை |
– |
எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை |
| சிறியன் என்று |
– |
(உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து |
| இகழேல் |
– |
அவமதியாதே; |
| சிறுமையில் |
– |
(இவனுடைய) பால்யத்தில் நிடந்த |
| வார்த்தையை |
– |
செய்கையை |
| மாவலி இடை சென்று கேள் |
– |
மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்; |
|
(இப்படியுள்ளவன் விஷயத்தில்) |
||
| சிறுமை பிழைகொள்ளில் |
– |
சிறுமை நினைத்தலிது மஹாபாரதம் என்று நினைத்தாயாகில் |
|
(அப்போது) நீயும்; |
||
| உன் தேவைக்கு |
– |
(அஜன் விஷயத்தில்) நீ பண்ணக்கூடிய அடிமைக்கு |
| உரியை |
– |
தகுந்தவனாவாய் ; |
|
(அதெல்லாமப்படி நிற்க;) |
||
| நெடு மால் |
– |
ஸர்வஸ்மாத்பரனான இவன் |
|
விரைந்து உன்னை கூவுகின்றான் |
||
|
(‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. ) |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – சந்திரா! என் குழந்தையை ‘மற்றுள்ள ஊர்ப்பிள்ளைகளைப் போலே இவனும் ஒரு சிறியவன்தானே’ என்று இகழ்ச்சியாக நினைக்கிறாய் போலும்; அப்பநா நினையாதே; இவன் முன்பொருகால் மாணிக்குறளுருவாய் மாவலியிடஞ் சென்று செய்த காரியங்களை அந்த மஹாபலியையே கேட்டுத் தெரிந்துகொள்; மிகப்பெரியவனான இவனைச் சிறியவனென்று நினைத்து அலட்சியஞ் செய்தவிது மஹத்தான அபசாரம் என்று தாடைமேல் அறைந்து கொள்வாயாகில் பிறகுதான் நீ இவனருகில் வந்து ஏதேனும் அடிமை செய்வதற்கு யோக்யதை பெறுவாய். “சிறுமையின் வார்த்தையை” என்றவிடத்து வார்த்தை என்றது வாய்ச்சொல் என்றபடியன்று; நடவடிக்கை என்றபடி. “வாத-÷õவூவதி:வதெ: = வார்த்தா ப்ரவ்ருத்திர் வ்ருத்தாந்த:” என்பது அமரகோசம். “மாவலியிடைச் சென்று கேள்” என்றதன் கருத்தாவது மாவலியின் கொழுப்பை யடக்கின கதையைக் கொண்டே நீ அவனது பெருமையை அறுதியிடலாமென்க.
English Translation
O, Full Moon! Do not trifle with my lion-cub for his small size. Go and learn from Mahabali what smallness can do. If you too show regret for trifling him, you too can secure his grace. The Lord of the Universe calls, make haste.
