(60)
பாலக னென்றுபரிபவம் செய்யேல் பண்டொருநாள்
ஆலி னிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாமதீ மகிழ்ந் தோடிவா.
பதவுரை
|
மா மதீ!; |
||
| பாலகன் என்று |
– |
‘இவனொரு சிறுபயலன்றோ’ என்று |
| பரிபவம் செய்யேல் |
– |
திரஸ்கரியாதே; |
| பண்டு ஒருநாள் |
– |
முன்பொரு காலத்திலே |
| ஆலின் இலை |
– |
ஆலந்தளிரிலே |
| வளர்ந்த |
– |
கண்வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப்படுகிற |
| சிறுக்கண் அஜன் |
– |
அந்த சிறுப்பிள்ளையானவன் |
| இவன் |
– |
இவனாகிறான் காண்; |
| வெகுளும் ஏல் |
– |
(இவன்) சீறினானாகில் |
| மேல்எழப் பாய்ந்து |
– |
(உன்மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து |
| பிடித்துக்கொள்ளும் |
– |
(உன்னைப்) பிடித்துக் கொள்வான்; |
| மாலை |
– |
இம்மஹாபுருஷனை |
| மதியாதே |
– |
அவமதியாமல் |
|
மகிழ்ந்து ஓடிவா–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – சந்திரா! ஓயாமல் உன்னை அழைக்கச் செய்தேயும் நீ வாராமையினால் இவனொரு சிறுபிள்ளை தானே இவனுக்காக ஓடிவரவேணுமோ என்று அலட்சியமாக நினைக்கிறாய் என்பது தெரிகின்றது; இவனைச் சிறியவன் என்று நீ குறைவாக நினைக்கலாகாது; இவன் முன்னொரு காலத்தில் உலகங்களை எல்லாம் பிரளயங்கொள்ளாதபடி வயிற்றிலே வைத்துக் கொண்டு சிறு பசுங்குழந்தையாய் இருந்தவன்காண்; இப்படிப்பட்ட இவனை நீ அலட்சியஞ் செய்தால் இவன் உன்மேற் கோபங்கொண்டு பாய்ந்தெழுந்து உன்னைப் பிடித்துக்கொள்ளவுங் கூடும்; ஆகையால் இவனை அவமதியாமல் உடனே விரைந்தோடி வா என்கிறாள்.
பாலகன். பரிபவம் – வடசொற்கள். “பிடித்துக் கொள்வன்” “வெகுள்வன்” எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து பிடித்துக்கொள்ளும் என்றும் வெகுளும் என்றும் செய்யு மென்முற்று வந்தன.
English Translation
O, Big Moon! Do not think he is a mere child. Then in the past, he swallowed the Universe and slept on a fig leaf, know it. If he gets angry he can easily leap up and catch you. So cast aside your self-esteem and come on your own accord.
