(60)

(60)

பாலக னென்றுபரிபவம் செய்யேல் பண்டொருநாள்

ஆலி னிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்

மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்

மாலை மதியாதே மாமதீ மகிழ்ந் தோடிவா.

பதவுரை

மா மதீ!;

பாலகன் என்று

‘இவனொரு சிறுபயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்

திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்

முன்பொரு காலத்திலே
ஆலின் இலை

ஆலந்தளிரிலே
வளர்ந்த

கண்வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப்படுகிற
சிறுக்கண் அஜன்

அந்த சிறுப்பிள்ளையானவன்
இவன்

இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்

(இவன்) சீறினானாகில்
மேல்எழப் பாய்ந்து

(உன்மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக்கொள்ளும்

(உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை

இம்மஹாபுருஷனை
மதியாதே

அவமதியாமல்

மகிழ்ந்து ஓடிவா–.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சந்திரா! ஓயாமல் உன்னை அழைக்கச் செய்தேயும் நீ வாராமையினால் இவனொரு சிறுபிள்ளை தானே இவனுக்காக ஓடிவரவேணுமோ என்று அலட்சியமாக நினைக்கிறாய் என்பது தெரிகின்றது; இவனைச் சிறியவன் என்று நீ குறைவாக நினைக்கலாகாது; இவன் முன்னொரு காலத்தில் உலகங்களை எல்லாம் பிரளயங்கொள்ளாதபடி வயிற்றிலே வைத்துக் கொண்டு சிறு பசுங்குழந்தையாய் இருந்தவன்காண்; இப்படிப்பட்ட இவனை நீ அலட்சியஞ் செய்தால் இவன் உன்மேற் கோபங்கொண்டு பாய்ந்தெழுந்து உன்னைப் பிடித்துக்கொள்ளவுங் கூடும்; ஆகையால் இவனை அவமதியாமல் உடனே விரைந்தோடி வா என்கிறாள்.

பாலகன்.  பரிபவம் – வடசொற்கள்.  “பிடித்துக் கொள்வன்” “வெகுள்வன்” எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து பிடித்துக்கொள்ளும் என்றும் வெகுளும் என்றும் செய்யு மென்முற்று வந்தன.

English Translation

O, Big Moon! Do not think he is a mere child.  Then in the past, he swallowed the Universe and slept on a fig leaf, know it.  If he gets angry he can easily leap up and catch you.  So cast aside your self-esteem and come on your own accord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top