(59)
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.
பதவுரை
| விண் தனில் |
– |
ஆகாசத்திலே |
| மன்னிய |
– |
பொருந்திய |
| மா மதீ! |
– |
பெருமைதங்கிய சந்திரனே! |
| தண்டொடு |
– |
‘கௌமோதகி’ என்னும் கதையையும் |
| சக்கரம் |
– |
திருவாழியாழ்வானையும் |
| சார்ங்கம் |
– |
ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும் |
| ஏந்தும் |
– |
ஏந்தியிரா நின்றுள்ள |
| தட |
– |
விசாலமான |
| கையன் |
– |
கைகளையுடைய இக்கண்ணபிரான் |
| கண் துயில் கொள்ள கருதி |
– |
திருக்கண் வளர்ந்தருள நினைத்து |
| கொட்டாவி கொள்கின்றான் |
– |
கொட்டாவி விடாநின்றான். |
| உறங்காவிடில் |
– |
(இப்போது இவன்) உறங்காதொழிந்தால் |
| உண்ட |
– |
அமுது செய்யப்பட்டிருக்கிற |
| முலைப்பால் |
– |
ஸ்தந்யமானது |
| அறா |
– |
ஜரிக்கமாட்டாது; ஆகையால் |
|
விரைந்து ஓடிவா |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – உலகத்தில் மனிதர்களுக்கு அதிகமாகக் கொட்டாவி வந்தால் உடனே உறக்கம் வருமென்பது அநுபவஸித்தம் ஆதலால் “கண்டுயில் கொள்ளக்கருதிக் கொடடாவி கொள்கின்றான்” என்கிறாள். இவன் இப்போது கொட்டாவி விடுகிறபடியாலே இனித் தூங்கிவிடுவன்; தூங்காவிட்டாலோ உண்டமுலைப்பால் ஜரியாது; ஆதலால் இவன் உறங்கிப்போவதற்கு முன்னமே விரைந்து ஓடிவா என்றழைக்கிறாள். முதலடியில் மூன்று ஆயுதங்களைச் சொன்னது பஞ்சாயுதங்கட்கும் உபலக்ஷணம். இவ்வாயுதங்களின் அஷீகை ஸேவித்துப்போக வேண்டுவது உனக்கு உரியதேயன்றி இவற்றின் பராக்கிரமத்திற்கு இலக்காகி முடிந்து போகப் பாராதே என்றுணர்த்தியவாறு.
அறா – அறாது; ஜரியாது.
English Translation
O, Big Moon set in the wide sky! The Lord with mighty arms that hold the mace, discus and bow yawns as he goes to sleep. If he does not sleep, the breast-milk he drank will not be digested, see! So come quickly! Make haste and come.
