(58)

(58)

அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா

மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்

குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்

புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!

பதவுரை

புகர்

தேஜஸ்வியாய்
மா

பெருமைபொருந்தியிராநின்ற
மதீ

சந்திரனே!
அழகிய வாயில்

அழகிய திருப்பவளத்திலே
ஊறல்

ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்

அம்ருதத்தோடேகூடி
றுதளிவுறா

உருத்தெரியாததாய்
மழலை முற்றாத

மழலைத்தனத்துக்குள்ள முற்றுதலுமில்லாதிருக்கிற
இ ளசொல்லால்

இளம்பேச்சாலே

உன்னை கூவுகின்றான்;

குழகன்

எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்

ச்ரிய: பதியான இக்கண்ணபிரான்
கூவக்கூவ

(இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்

நீ போவாயேயானால்
நின் செவி

உன் காதுளானவை
புழை இல

துளையில்லாதவையாக
ஆகாதே

ஆகாதோ?

(ஆகவே ஆகும்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சந்திரா! உன்னைக் கூவி அழைக்கிற இக் குழந்தையின் இனிய மழலைச் சொல் உன் காதில் விழவில்லையா?  செவிடனா நீ?  உன் காதில் துளையில்லையோ? இக்குழந்தை இனிய முற்றாமழலைச் சொல்லினால் உன்னை அழைக்கவும் நீ காது கேளாதாரைப்போல போய்விட்டாயானால் நீ காது படைத்தது பயனற்றதாகுமன்றோ என்கிறாள்.  இப்படிப்பட்ட இளஞ்சொல்லைக் கேட்டு உடனே ஓடி வருதலே செவிபடைத்ததற்குப் பலன் என்று காட்டினவாறு. மழலை – எழுத்துகள் ஸ்பஷ்டமாகத் தெரியாதே மதுரமாயிருக்குமது.  மழலைமுற்றாத இளஞ்சொல் என்றது – மழலைத் தனத்துருக்குள்ள முற்றுதலுமில்லாத மிக இளஞ்சொல் என்றபடி. குழகன் – “கொடுத்தார் கொடுத்தார் முலைகளெல்லா முண்டு எடுத்தாரெடுத்தாரோடெல்லாம் பொருந்தியிருக்கும் கலப்புடையவன்” என்பது வியாக்கியான வாக்கியம்.

English Translation

O, Big bright Moon! The adorable Sridhara with spittle dripping from his beautiful mouth, blabbers indistinctly, coos and calls to you.  If you go on ignoring his calls, would it not mean that your ears are without a bore?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top