(57)
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலட னல்லையேல் வாகண்டாய்.
பதவுரை
| சந்திரா |
– |
சந்திரனே! |
| சக்கரம் |
– |
திருவாழி ஆழ்வானை |
| கையன் |
– |
திருக்கையிலணிந்த கண்ணபிரான் |
| ஒக்கலை மேல் |
– |
(என்) இடுப்பின்மேல் |
| இருந்து |
– |
இருந்துகொண்டு |
| தட கண்ணால் |
– |
விசாலமான கண்களாலே |
| மலர் விழித்து |
– |
மலரப் பார்த்து |
| உன்னையே |
– |
உன்னையே |
| சுட்டிகாட்டும் |
– |
குக்ஷ்த்துக் காட்டுகின்றான்; |
| தக்கது |
– |
(உனக்குத்) தகுதியானதை |
| அறிதியேல் |
– |
அறிவாயாகில் (அன்றியும்) |
| மக்கள் பெறாத |
– |
பிள்ளைபெறாத |
| மலடன் அல்லையேல் |
– |
மலடன் அல்லையாகில் |
| சலம் செய்யாதே |
– |
கபடம் பண்ணாமல் |
| வா கண்டாய் |
– |
வந்து நில்கிடாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – சந்திரா! இவனை வெறுங்குழந்தையாக நினைத்து அலட்சியஞ் செய்திடாதே; இவன் சக்கரக்கையன் காண்; நீ வராமல் இருப்பாயானால் உன்மேல் சக்கரத்தைப் பிரயோகித்து உன்னைத் தண்டித்துவிடுவன் என்னும் கருத்தையடக்கி சக்கரககையன் என்கிறாள். “ஆழிகொண்டுன்னை யெறியும் ஐயுறவில்லை காண்” என்று மேலே ஸ்பஷ்டமாகவுங் கூறுவள்.
மக்கள் பெறாத மலடனல்லையேல் வா = குழந்தையை நீ இப்படி துடிக்க விடுவது தகுதியன்று; பிள்ளை பெறாதவர்களன்றோ பிள்ளையின் வருத்தமறியார்கள்; அப்படி நீ மலடனல்லையே; பிள்ளைகளை வருத்தப்படுத்தக்கூடாதென்பது உனக்குத் தெரியுமே என்றவாறு.
English Translation
O, Full Moon! The discus-wielding Lord with his large eyes opened wide, seated on my waist, points at you alone. Know what is proper, and do not deceive him. If you are not a child-less sterile, take note and come.
