(49)

(49)

ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்

சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்

மாதக்க வென்று வருணன் விடுதந்தான்,

சோதிச் சுடர்முடியாய்  தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!

பதவுரை

ஓதம்

–

அலையெறிப்பையுடைய
கடலில்

–

ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி

–

ஒளியையுடைத்தாய்
முத்தின்

–

முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும்

–

ஹாரத்தையும்
சாதி

–

நல்லஜாதியிலுண்டான
பவளமும்

–

பவழவடத்தையும்
சந்தம்

–

அழகுபொருந்திய
சரி

–

முன் கை வளைகளையும்
வளையும்

–

தோல்வளைகளையும்
மா தக்க என்று

–

விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று
வருணன்

–

வருணதேவனானவன் விடுதந்தான்
சோதி சுடர்

–

மிக்கஜ்யோதிஸ்ஸையுடைய
முடியாய்

–

கிரீடத்தையணிந்த கண்ணனே!

தாலேலோ. . !

சுந்தரம் தோளனே

–

அழகிய திருத்தோள்களையுடைய கண்ணனே!

தாலேலோ. . !

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – வருணைதேவன் கருங்கடற் கடவுளாதலால் அக்கடலில் நின்றுந்தோன்றின முத்துக்களினாலும் பவழங்களினாலும் ஆகிய ஹாரங்களையும் முன்கைச் சரிகளையும் சங்கு வளையல்களையும் அனுப்பினான்.  அதைச்சொல்லித் தாலாட்டுகிறாள்.  அரக்கு முதலியவற்றால் செய்யப்பட்ட க்ருத்ரிமப்பவழங்களும் உண்டாதலால் அப்படியல்லாமல் உண்மையான சிறந்த பவளமென்கைக்காகச் சாதிப்பவள மெனப்பட்டது.  சோதிச்சுடர் –  ஒரு பொருட்பன்மொழிதக்க – வினைமுற்று.

English Translation

Varuna has sent a perfectly matching set of bangles and bracelets set with prized corals and a string of lustrous pearls from the deep ocean.  O, Radiant-crowned Lord, Talelo.  Lord with beautiful arms, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top