(49)
ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்,
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!
பதவுரை
| ஓதம் |
– |
அலையெறிப்பையுடைய |
| கடலில் |
– |
ஸமுத்ரத்தில் (உண்டாய்) |
| ஒளி |
– |
ஒளியையுடைத்தாய் |
| முத்தின் |
– |
முத்துக்களால் கோக்கப்பட்ட |
| ஆரமும் |
– |
ஹாரத்தையும் |
| சாதி |
– |
நல்லஜாதியிலுண்டான |
| பவளமும் |
– |
பவழவடத்தையும் |
| சந்தம் |
– |
அழகுபொருந்திய |
| சரி |
– |
முன் கை வளைகளையும் |
| வளையும் |
– |
தோல்வளைகளையும் |
| மா தக்க என்று |
– |
விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று |
| வருணன் |
– |
வருணதேவனானவன் விடுதந்தான் |
| சோதி சுடர் |
– |
மிக்கஜ்யோதிஸ்ஸையுடைய |
| முடியாய் |
– |
கிரீடத்தையணிந்த கண்ணனே! |
|
தாலேலோ. . ! |
||
| சுந்தரம் தோளனே |
– |
அழகிய திருத்தோள்களையுடைய கண்ணனே! |
|
தாலேலோ. . ! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – வருணைதேவன் கருங்கடற் கடவுளாதலால் அக்கடலில் நின்றுந்தோன்றின முத்துக்களினாலும் பவழங்களினாலும் ஆகிய ஹாரங்களையும் முன்கைச் சரிகளையும் சங்கு வளையல்களையும் அனுப்பினான். அதைச்சொல்லித் தாலாட்டுகிறாள். அரக்கு முதலியவற்றால் செய்யப்பட்ட க்ருத்ரிமப்பவழங்களும் உண்டாதலால் அப்படியல்லாமல் உண்மையான சிறந்த பவளமென்கைக்காகச் சாதிப்பவள மெனப்பட்டது. சோதிச்சுடர் – ஒரு பொருட்பன்மொழிதக்க – வினைமுற்று.
English Translation
Varuna has sent a perfectly matching set of bangles and bracelets set with prized corals and a string of lustrous pearls from the deep ocean. O, Radiant-crowned Lord, Talelo. Lord with beautiful arms, Talelo.
