(47)

(47)

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,

செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!

பதவுரை

சங்கில்

–

சங்குகளில்(சிறந்த)
வலம்புரியும்

–

வலம்புரிச்சங்கையும்
சே அடி

–

செவ்விய திருவடிகளில் (சாத்தத்தகுந்த)
கிண்கிணியும்

–

சதங்கையையும்
அம் கை

–

அழகிய கைகளுக்கு உரிய
சரி

–

முன் கை வளைகளையும்
வளையும்

–

தோள்வளைகளையும்
நாணும்

–

பொன்னரை நாணையும்
அரை தொடரும்

–

அரைவடத்தையும்
அம் கண்

–

அழகியதாய் விசாலமான
விசும்பில்

–

ஸ்வர்க்கத்திலுள்ள
அமரர்கள்

–

தேவர்கள்
போத்தந்தார்

–

அனுப்பினார்கள்
செம் கண்

–

சிவந்த கண்களையுடையையாய்
கருமுகிலே

–

கானமேகம் போன்ற வடிவையுமுடையையான கண்ணனே!

தாலேலோ!

தேவகி

–

தேவகியின் வயிற்றிற்பிறந்த
சிங்கமே

–

சிங்கக் குருகே!

தாலேலோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – தேவதைகள் பலர் கூடிப் பல திருவாபரணங்களை அனுப்புகிறார்களென்று சொல்லித் தாலாட்டுகிறாள்.

சங்கில் + வலம்புரி, சங்கின் வலம்புரி,‘ ‘குறில்செறியாலன அல்வழிவந்த. . . ’என்ற நன்ணூற் சூத்திரத்திள் இறுதியில் ‘பிற’ என்றமிகையை நோக்குக.  நான் திருமார்வுக்கு அலங்காரமாகச் சாத்தத்தக்க நாணாகவுமாம்.  செங்கண் + கருமுகில், செங்கட்கருமுகில்.  கருமுகிலே! முற்றுவமை.

English Translation

Gods of the wide sky have sent these jewels of dextral conch, anklets, bangles, chains and waist thread.  O, Red-eyed cloud-hued Lord, Talelo.  O, Devaki’s lion club, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top