(25)

(25)

பணைத்தோ ளிளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை

அணைத்தார உண்டு கிடந்தஇப் பிள்ளை

இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும்

கணைக்கால் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.

பதவுரை

பணை

மூங்கில்போன்ற
தோள்

தோள்களையுடையளாய்
இள

இளமைப்பருவத்தையுடையளான
ஆய்ச்சி

யசோதையினுடைய
பால் பாய்ந்த

பால் சொரிகிற
கொங்கை

முலையை
அணைத்து

(திருக்கையால்) அணைத்துக்கொண்டு
ஆர

வயிறு நிரம்ப
உண்டு

(பாலை) அமுதுசெய்து
கிடந்த

(களித்துக்) கிடக்கின்ற
இ பிள்ளை

இந்தக் கண்ணபிரானுடைய
இணை

சேர்த்தியழகு அமைந்த
காலில்

திருவடிகளில்
வெள்ளி தளை நின்று

வெள்ளித் தண்டை நின்று
இலங்கும்

விளங்காநிற்கிற
கணைக்கால் இருந்த ஆ

கணைக்காலிருந்தபடியை

காணீர்!

காரிகையீர்

அழகுடைய பெண்காள்

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ‘‘பணைத்தோளிள வாய்ச்சி’’ என்றது – தன்மையில் வந்த படர்க்கை: ஆய்ச்சியாகிய என்னுடைய என்றபடி.  அன்பினால் நெறித்துப் பால் சொரிகிற என் முலையைத் திருக்கைகளாலே அணைத்து வயிறாரவுண்டு மகிழ்ந்துகிடக்கிற இப்பிள்ளையினுடைய கால்களில் வெள்ளித்தண்டை விளங்கா நிற்கிற கணைக்காலின் அழகை வந்து காணுங்கள்.

English Translation

Beautiful Ladies, come here and see, this child sleeps after sucking from the milk-laden breasts of a young slender Gopi of bamboo-like arms.  His two feet are adorned by silver anklets.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top