(24)

(24)

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.

பதவுரை

முத்தும்

முத்துக்களையும்
மணியும்

ரத்நங்களையும்
வயிரமும்

வஜ்ரங்களையும்
நல்பொன்னும்

மாற்றுயர்ந்த பொன்னையும்
தத்திப்பதித்து

மாறிமாறிப்பதித்து
தலைப்பெய்தாற்போல்

சேர்த்தாற்போலே
எங்கும்

திருமேனியெங்கும்
மணிவண்ணன்

மணிபோன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய
பாதங்கள்

திருவடிகளிலுள்ள
பத்து விரலும்

விரல் பத்தும்
ஒத்திட்டிருந்ஆ

ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை

காணீர்!

ஒன் நுதலீர்

ஒளிபொருந்திய நெற்றியையுடையீர்கான்!

வந்து காணீர்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – முதலடியில் சில ரத்னங்களைச் சொன்னது நவரத்னங்களுக்கும் உபலக்ஷணம்.  கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன நவரத்தினங்களாம்.  கால்களுக்கு இடுகின்ற செம்பஞ்சு மருதாணி என்பனபோல ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் – நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என்கிறாள்.

English Translation

Bright forehead Ladies, come here and see the gem-hued Lord’s feet, full with ten little toes like pearls, garnets and diamonds set in gold all over.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top